சொந்தமாக வீடு கட்ட ஒருவர் எவ்வளவு ரூபாய் வரை சம்பளம் வாங்க வேண்டும் தெரியுமா..?

how much salary do you need to build your own house in tamilnadu tamil

சொந்த வீடு வாங்க பணம்

என்ன தான் நம்முடைய வசதிகளுக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாடகை வீட்டில் வசித்து வந்தாலும் கூட சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பெரும்பாலான நபர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான நேரம் என்பது தான் அமைவது இல்லை. ஏனென்றால் வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் அடித்தளமாக இருப்பது பணம் தான். நம்மிடம் பணம் இருந்தால் வீடு கட்டுவதற்கான இடம் முதல் மற்ற பொருட்கள் என அனைத்தினையும் வாங்க முடியும். இவ்வாறு தேவைப்படும் பணத்தினை நாம் சம்பாதித்தால் மட்டும் தான் பெற முடியும். அதனால் ஒருவர் எவ்வளவு சம்பளம் வாங்கினால் வீடு கட்ட முடியும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..!

சொந்த வீடு கட்ட எவ்வளவு சம்பளம் இருக்க வேண்டும்..?

சொந்தமாக வீடு கட்ட பெரும்பாலானோர் முதலில் பணத்தினை வங்கியில் தான் கடனாக வாங்குகிறார்கள். அப்படி பார்த்தால் மாதம் தோறும் நாம் EMI தொகை மற்றும் வாடகை தொகை என இரண்டையும் கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

 சொந்த வீடு வாங்க பணம்

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் கட்டும் வாடகை மற்றும் EMI தொகை என இரண்டும் சமமாக இருந்தால் வீடு கட்டுவதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது என்று ஸ்ரீனிவாசன் ஆனந்த் கூறியிருக்கிறார்.

ஒருவேளை EMI ஆண்டு வாடகையினை விட அதிகமாக இருந்தால் அப்போது வீடு கட்ட வேண்டும் என்ற முடிவினை எடுப்பது அவ்வளவு சரியாக இருக்காது என்று கூறுகிறார்.

மேலும் ஒருவர் பெரும் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் கூட அதில் இருந்து குறிப்பிட்ட தொகையினை சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் இருந்தாலும் வீட்டினை விரைவில் கட்டி விடலாம் என்றும் கூறி இருக்கிறார்.

ஆகவே வீட்டின் EMI தொகை மற்றும் வாடகை தொகை என இரண்டும் ஒரே அளவில் இருக்கும் களங்களில் நிலையில் வீடு கட்டுவது நல்லது என்பது ஸ்ரீனிவாசன் ஆனந்த் அவர்களின் கருத்து.

60,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் சொந்தமாக வீடு கட்ட முடியுமா..?

எடுத்துக்காட்டாக ஒரு நபர் வீடு கட்டுவதற்காக இந்தியன் வங்கியில் 15 லட்சம் ரூபாய் கடன் வங்கியினால் அவருக்கு எவ்வளவு EMI மற்றும் வட்டி அதுவும் 5 வருட கால அளவில் வரும் என்பதை பார்க்கலாம்.

கடன் தொகை: 15,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 8.75%

மாத EMI: 30,956 ரூபாய் 

மொத்த வட்டி: 3,57,351 ரூபாய் 

அசல் தொகை: 18,57,351 ரூபாய் 

எனவே மேலே கூறப்பட்டுள்ள முறைகளின் படி பார்த்தால் மாத EMI தொகை என்பது தோராயமாக 30,956 ரூபாய் வருகிறது. மேலும் வாடகை என்பது இதை விட குறைவாக வந்தால் வேண்டுமானால் உங்களால் வீடு கட்ட முடியும். அதேபோல் இதர செலவுகளும் இருப்பதனால் உங்களின் சேமிப்பினை பொறுத்து வீடு கட்டும் திறமை என்பது அமையலாம்.

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn