How to Sell Affiliate Products In Tamil..!
வணக்கம் அன்பான நண்பர்களே… இதுவரை நம் பதிவில் Affiliate Marketing பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொண்டிருப்போம். அதேபோல இன்று நம் பதிவில் உங்களுடைய வலைப்பதிவில் Affiliate Products -ஐ எப்படி விற்பனை செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் Affiliate Products எப்படி விற்பனை செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
Affiliate Products விற்பனை செய்வது எப்படி..?
ஒரு நிறுவனத்திடம் இருக்கும் பொருட்களை உங்களின் மூலமாக மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் முறையை Affiliate Marketing என்று கூறுகிறோம். இதுபோல நீங்கள் விற்று கொடுக்கும் பொருளுக்கான கமிஷன் உங்களுக்கு அந்த நிறுவனத்திடம் இருந்து கிடைத்து விடும். இதுவே Affiliate Marketing ஆகும்.
Affiliate Marketing பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ⇒ சந்தைப்படுத்தல் என்றால் என்ன
இப்பொழுது நாம் உங்களுடைய வலைப்பதிவின் மூலம் Affiliate Products எப்படி விற்பனை செய்வது என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
Review Post:
முதலில் நீங்கள் ஒரு தயாரிப்பு பொருளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் அதற்கான மறுஆய்வு Review பதிவை வெளியிட வேண்டும்.
காரணம் உங்கள் வலைப்பதிவில் உள்ள நேயர்களுக்கு நீங்கள் விற்கும் தயாரிப்பு பொருளை அறிமுகப்டுத்துவது மற்றும் அந்த பொருளை அவர்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான கருத்தை அவர்களுக்கு நீங்கள் கூறவேண்டும்.
நீங்கள் கூறும் இந்த கருத்துக்கள் தான் அவர்களை நீங்கள் விற்கும் பொருட்களை வாங்க தூண்டுகிறது.
பெரும்பாலான மக்கள் பொருட்கள் பற்றிய நல்ல கருத்துக்களை மட்டுமே தேடுகிறார்கள். வலைப்பதிவில் நீங்கள் கூறும் கருத்துகள் நேர்மையாக இருக்க வேண்டும்.
நீங்கள் விற்கும் பொருள் பற்றிய முழு தகவல்களையும் உங்கள் வலைப்பதிவில் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் அந்த Review தான் நீங்கள் விற்கும் பொருட்களை வாங்க தூண்டும்.
Blog Post Promotion:
இரண்டாவதாக நீங்கள் உங்கள் வலைப்பதிவில் Affiliate link -யை கொடுக்க வேண்டும். இது உங்களின் வருமானத்தை பெருக்ககூடிய சிறந்த வழி ஆகும். நீங்கள் கண்டிப்பாக ஒரு கருத்தை வெளியிடுவீர்கள்.
அதை Targeted post என்று கூறலாம். அதாவது நீங்கள் எழுதும் ஏதோ ஒரு கருத்தில் Affiliate link கொடுக்க வேண்டும்.
இதையும் பாருங்கள்—> ஆன்லைனில் Affiliate Marketing மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி?
Use coupon codes in Tamil:
மூன்றாவதாக நீங்கள் கூப்பன் குறியீடுகளை பயன்படுத்த வேண்டும். இந்த கூப்பன் குறியீட்டை கொண்டு நீங்கள் நல்ல கமிஷனை பெறலாம். இந்த கூப்பன் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் பொருள் உங்களுடையது இல்லை என கூற வாய்ப்புள்ளது. நீங்கள் coupon code – களுக்கு Blog post எழுதுவதையும் கருத்தில் கொள்ளலாம்.
How – To Articles in Tamil:
நீங்கள் விற்கும் அந்த பொருள் பற்றிய சிறந்த கருத்துக்களை நீங்கள் உங்கள் பதிவில் எழுதலாம். உங்கள் Search engine ranking –யை மேம்படுத்த உதவுகிறது. இது Search engine என்ற ஆப்ஷனில் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.
Use Banners On The Sidebar in Tamil:
நீங்கள் பயன்படுத்தும் Sidebar-ல் அதிக பேனர்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிக பேனர்கள் சேர்ப்பதால் உங்கள் வாசகர்கள் குழம்புவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. அதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்புடைய தயாரிப்புகளை வைப்பது நல்லது.
உதாரணமாக, WordPress பற்றிய வலைப்பதிவு இடுகையில் இதற்கான விளம்பரத்தை வைக்கலாம்.
இதுபோன்ற முறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வலைப்பதிவில் உங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யலாம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |