மைல்கல் என்றால் என்ன.?
நாம் சாலையோரத்தில் செல்லும் போது மைல்கல் இருப்பதை பார்த்திருப்போம். நம் முன்னோர்கள் காலத்தில் போன் இல்லாத நேரத்தில் எல்லாம் இந்த மைல்கல் போட்டிருக்கும் தூரத்தை வைத்து தான் ஊருக்கு செல்வார்கள். ஆனால் இன்றைய காலத்திலும் மைல்கள் பார்த்து செல்லுவோம். இந்த மைல்கல் தூரத்தை மட்டுமில்லை இன்னொரு விஷயத்தையும் உணர்த்துகிறது. அது என்ன விஷயம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் மைல்கல் வெள்ளை, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கும். இந்த நிறங்கள் எதை உணர்த்துகின்றன என்பதை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
மைல்கல் வெவ்வேறு நிறத்தில் இருப்பதற்கான காரணம்:
நம்மிடம் போன், Gps போன்ற எந்த விதமான தொழிலிநுட்பமும் இல்லாத பொது நமக்கு வழிகாட்டியாக இருந்தது மைல்கள் தான். இதில் அடுத்து என்ன ஊர், அதற்கு எத்தனை கிலோ மீட்டர், நாம் பயணிக்கிறது என்ன சாலை போன்றவற்றை உணர்த்துகிறது. அதில் நான்கு நிறத்தில் மட்டும் இருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
நம் இந்திய அரசு நான்கு விதமான சாலைகளை பராமரிக்கிறது. நேஷனல் ஹை வே, ஸ்டேட் ஹை வே, மாவட்ட ரோடு, பஞ்சாயத்து ரரோடு போன்ற சாலைகள் இருக்கிறது.
சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் ஏன் உள்ளன..? காரணம் தெரியுமா..?
இதில் முதலாவதாக மஞ்சள் நிறம் மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் இருந்தால் தேசிய நெடுஞ்சாலை என்பதை உணர்த்துகிறது.
பச்சை நிறம் மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் இருந்தால் மாநில நெடுஞ்சாலை என்பதை உணர்த்துகிறது.
நீலம் மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் மாவட்ட நெடுஞ்சாலை என்பதை உணர்த்துகிறது.
ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் கிராமப்புற சாலை என்பதை குறிக்கிறது.
ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |