Instagram in Tamil Meaning
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் Instagram என்பதன் தமிழ் பெயர் என்ன.? (Instagram in Tamil Name) என்பதை பின்வருமாறு விவரித்துளோம். இக்காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் தேவை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஸ்மார்ட் போனில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது Whatsapp, Facebook மற்றும் Instagram தான். இவற்றில் அதிகமான நேரத்தை செலவிடுவது இன்ஸ்டாகிராமில் தான். என்னதான் நாம் அனைவரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தாலும் Instagram in Tamil Name என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம்.
எனவே, அப்படி நீங்கள் இன்ஸ்டாகிராம் என்பதன் தமிழ் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க இப்பதிவில் இன்ஸ்டாகிராம் என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதையும், அதனை பற்றிய சில விவரங்களையும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்..!
Instagram என்பதன் தமிழ் பெயர்:
Instagram என்பதன் தமிழ் பெயர் படவரி என்பதாகும். Instagram ஆப் 2010 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் இலவச, ஒளிப்படங்கள் பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளாகும். இன்ஸ்டாகிராம் ஆனது ஆரம்ப காலத்தில் ஐ-போன், ஐ-பேடு, மற்றும் ஐ-பாடு டச்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆண்ட்ராய்டுகளிலும் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இந்த ஆப்பினை ஆப்பிள் ஸ்டோர் மூலமாகவும் கூகுள் பிளே மூலமாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.Instagram பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும், வீடியோ போன்ற காட்சிகளை பார்ப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதால் பெரும்பாலனவர்கள் இன்ஸ்டாக்ராமை அதிகமாக பயனப்டுத்துகிறார்கள். இதனை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் தான் அதிகம். இன்னும் பலர் இதன் மூலம் பணமும் சம்பாதிக்கிறார்கள். இப்படி இன்ஸ்டாகிராம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எனவே, இப்பதிவில் இன்ஸ்டாகிராம் என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
பெண்களுக்கான இன்ஸ்டாகிராம் யூசர் நேம் லிஸ்ட்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.