தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 | IT Act 2000 in Tamil

IT Act 2000 Section 65 in Tamil

IT Act 2000 in Tamil

ஒரு குற்றத்தை செய்யும் குற்றவாளிக்கு தண்டனை கண்டிப்பா வழங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் IT act 2000 (Information Technology) சட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த சட்டம் இலக்கமுறை (டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை, கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது.  இதில் மொத்தம்  13 சட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான 6 சட்டங்களை பற்றி பார்ப்போம். இந்த சட்டங்கள் எந்த குற்றத்திற்காக அதற்குரிய தண்டனைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் தொழில் நுட்பம் சட்டம் பிரிவுகள்:

  • IT Act 2000 Section  65
  • IT Act 2000 Section 66
  • IT Act 2000 Section 67
  • IT Act 2000 Section 72
  • IT Act 2000 Section 73
  • IT Act 2000 Section 74

IT Act 2000 Section 65 in Tamil:

ஒருவரின் Computer- ல் இருக்கும் files-யை அழிக்கும் குற்றத்திற்கு தகவல் தொழில் நுட்ப சட்டபிரிவு 65 படி 03 வருட சிறை தண்டனை மற்றும்  Rs.2,00,000 வரை அபராதம் இருக்கும்.

IT Act, 2000 Section 66 in Tamil:

நீங்கள் ஒரு Computer வைத்திருந்து இன்னொரு computer ஊடுருவு  (Hacking With Computer System) குற்றத்தை செய்தால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 படி 03 வருட சிறை தண்டனை Rs.5,00,000 வரை அபராதம் இருக்கும்.

IT Act, 2000 Section 67 in Tamil:

நீங்கள் பாலியல் படம் அல்லது பாலியல் வீடியோ போன்றவையை online-ல் வெளியிடுவது குற்றமாகும். அப்படி நீங்கள் வெளியிட்டால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 67 படி 05 வருட சிறை தண்டனை கிடைக்கும்.

IT Act 2000 Section 72 in Tamil:

ஒருவர் வைத்திருக்கும் தகவல்களை (Data) திருடினால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 72 படி 02 வருட சிறை தண்டனை மற்றும் Rs.1,00,000 அபராதம் இருக்கும்.

IT Act 2000 Section 73 in Tamil:

நீங்கள் போலியான பொறியியல் மற்றும் மருத்துவம் சான்றிதழ் ரெடி செய்து தந்தால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 73 படி 02 வருட சிறை தண்டனை மற்றும் Rs.1,00,000 அபராதம் இருக்கும்.

IT  Act 2000 Section 74 in Tamil:

Internet-ல் மற்றவர்களின் விவரத்தை திருடுவதும், ஏமாற்றுவதும் குற்றமாகும். இந்த குற்றத்தை செய்தால் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 74 படி 02 வருட சிறை தண்டனை மற்றும் Rs.1,00,000 அபராதம் இருக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com