Jamun Fruit என்பதன் தமிழ் பெயர் என்ன.? அதன் முழு விவரம் இதோ..!

Advertisement

Jamun Fruit in Tamil | What is Jamun Called in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Jamun Fruit in Tamil Meaning பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே Jamun Fruit என்பதை பிறர் கூற கேட்டு இருப்போம். ஆனால், அதன் தமிழ்ப்பெயர் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக பழங்களின் பெயரை நாம் ஆங்கிலத்தில் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், நமக்கு தெரியாத பல பழவகைகள் உள்ளது. அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில், இந்த Jamun Fruit பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க மாட்டோம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் Jamun Fruit என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதையும், அதனை பற்றிய விவரங்களையும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

What is Jamun Called in Tamil | Jamun Fruit in Tamil Meaning:

  •  Jamun Fruit என்பதன் தமிழ் பெயர் நாவல் பழம் ஆகும். நாவல் பழம் பழவகைகளில் ஒன்றாகும். இது அதிக துவர்ப்பும், லேஸ்கள் இனிப்பும் மற்றும் லேசான புளிப்பு சுவையும் கொண்ட பழம் ஆகும். இப்பழம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது.

Jamun Fruit in Tamil Meaning

  • இந்த நாவல் பழம் ஆனது, அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம் மற்றும் சாம்பல் போன்ற பெயர்களினாலும் அறியப்படுகிறது. மேலும், நாவல்பழத்தில் கருநாவல், கொடி நாவல் மற்றும் சம்பு நாவல் என மூன்று வகைகள் உள்ளன.

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

  • நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை சாப்பிடுவதால் உடலிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
  • நாவல் பழம் மட்டுமின்றி, இவற்றின் கொட்டைகள், இலை மற்றும் பட்டை என அனைத்தும் மறுத்துவ குணங்கள் நிறைந்தது ஆகும்.
  • இவற்றின் மரம் ஆனது 30 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியது. அதுமட்டுமில்லாமல், இம்மரம் 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியது ஆகும்.
  • இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய பழம் ஆகும். நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நாவல்பழம் தீர்வாக அமைகிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement