Kaalai Veru Peyargal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காளை என்பதன் வேறு பெயர்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், நம்மில் பலபேருக்கும் அந்த வேறு சொற்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் காளை என்பதற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
காளைகள் நிலத்தை உழுவதற்கும், சுமையை எடுத்து செல்வதற்கும் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் பங்கேற்கவும் வளர்க்கப்படுகிறது. காளை சண்டையில், புகழ்பெற்ற நாடு டெல்லி, ஸ்பெயின் ஆகும். காளை என்பது, கழுத்திற்கும், முதுகிற்கும் நடுவில் உயர்ந்த திமிலுடனும் வாயிலிருந்து, முதல் முன்னங்கால் வரை தொங்கும் சதையை கொண்டிருக்கும் ஆண் மாடுகள் ஆகும். கம்பீரமான தோற்றத்தை அளிக்கக்கூடியது ஆகும். காளை மட்டுமே நமக்கு தெரியும். அதற்கு பல பெயர்கள் உள்ளது. அது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.
காளை என்றால் என்ன.?
காளை என்பது, மாட்டு இனங்களில் ஆண் பால் விலங்கை குறிக்கும் பெயர் ஆகும். மக்கள், காளையை இனப்பெருக்கத்திற்காகவும், நிலத்தை உழுவதற்காகவும், போக்குவரத்திற்காகவும் சுமைகளை தூக்குவதற்காகவும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மேலும், ஏறுதழுவல், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டிற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
கோவில்களில் காளையை நேர்த்திக்கடனாக விடுவார்கள். இதனை கோவில் காளை என்று கூறுவார்கள். கோவிலுக்காக நேர்த்திவிட்ட காளை யாருக்கும் தீங்கு செய்வதில்லை. அதேபோல், மற்றவர்களும் கோவில் காளையை தவறான முறையில் பயன்டுத்துவதில்லை. சைவ சமயத்தில் காளையை நந்தி என்று வணங்குவார்கள். சிவன் பார்வதின் வாகனமாகவும் நந்தி அமைத்துள்ளது.
காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா..?
காளை வேறு பெயர்கள்:
- எருது
- மூரி
- ஏறு
- பகடு
- ஆண் மாடு
- பாறல்
- புல்லம்
- பாண்டில்
- பூணி
- இறால்
- பெற்றம்
- சே
- விடை
- இடபம்
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் காளை என்பதை குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு காலையினங்கள்:
- காங்கேயம் காளை
- உம்பளச்சேரி காளை
- புளியங்குளம் காளை
- பர்கூர் காளை
காளை வகைகள்:
- காங்கேயம் காளை
- உம்பளச்சேரி காளை
- ஆலம்பாடி காளை
- ஒங்கோல் காளை
- கங்காத்ரி காளை
- காங்ரேஜ் குஸ்ராத் காளை
- கிரிகார் காளை
- கிலாரி காளை
- கின்கதா காளை
- டாங்கி காளை
- கௌலவ் காளை
- சாஹிவால் காளை
- சிவப்பு கந்திரி காளை
- செம்மறை காளை
- தார்பார்கர் காளை
- தீவனி காளை
- நாகோரி காளை
- நிமாரி காளை
- நெல்லூர் காளை
- பொன்வார் காளை
- மலைநாடு காளை
- மால்வி காளை
- ஜவாரி காளை
- ஹரியானா காளை
- ஹள்ளிகார் காளை
காளை in English Name:
ஆங்கிலத்தில் காளையை Bull என்று கூறுவார்கள்.
இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள்..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |