கல்வி என்றால் என்ன.?
நம்முடைய செல்வத்திலையே அழியாத செல்வம் என்றால் கல்வி செல்வம் தான். இந்த கல்வி ஆனது நம்மை செதுக்கிறது, நமுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்துகிறது, அறிவை வளர்கிறது, நாம் ஒரு மனிதனாக வெளிவட்டாரத்தில் தெரிவதற்கு கல்வி முக்கியமானதாக இருக்கிறது.
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் கல்வியை பயிலவில்லை. ஆனால் இந்த காலத்தில் அப்படி இருக்க முடியாது. அனைவரும் கல்வியை பயின்றால் நம்முடைய எதிர்காலம் நன்றாக இருக்கும். கல்வி இவ்வளவு தான் முடித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இதற்கு முடிவு என்பது கிடையாது. நாம் ஆயுள் முழுவதும் கூட படித்து கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட இந்த கல்விக்கு பல வகையான பெயர்கள் இருக்கிறது அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
கல்வி வேறு பெயர்கள்:
- படிப்பு
- அறிவு
- போதனை
- கற்றல்
மேல் கூறிய பெயர்களால் கல்வி என்பதனை அழைக்கலாம்.
படிப்பு: படிப்பு என்பது நீங்கள் வகுப்பறையில் படிக்கும் புத்தகங்கள் மற்றும் நீங்கள் என்ன வகுப்பு படிக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.
அறிவு: கல்வியின் மூலம் உங்களின் வளர்ச்சியை குறிக்கிறது.
போதனை: நீங்கள் கற்று கொண்ட அறிவை மற்றவர்களிடம் சேர்ப்பதை தான் போதனை என்கிறோம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் கற்று கொண்ட அறிவை உங்களிடத்தில் வைத்து கொள்வதால் எந்த பயனும் இல்லை, அதனை மற்றவர்களிடத்தில் கூறுவதால் தான் உங்களுடைய அறிவு திறன் மேன்மையுடையும்.
கற்றல்: எந்த விஷயத்தையும் கற்று கொள்வது.
கல்வி in English:
கல்வி என்பதனை ஆங்கிலத்தில் education என்று கூறலாம்.
கல்வி வகைகள்:
- முறைசார்ந்த கல்வி
- முறைசாரா கல்வி
- கற்றல் அனுபவம்
முறைசார்ந்த கல்வி:
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. ஒரு நிலையான பாடத்திட்டம், மதிப்பீடுகள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளன.
முறைசாரா கல்வி
முறைசார்ந்த கல்விக்கு ஒரு குறிப்பிட்ட வயது, காலமுறை உண்டு. ஆனால் எந்த விதமான கட்டுபாடுகள் இல்லாத முறையே முறைசாரா கல்வியாகும்.
கற்றல் அனுபவம்:
தாமாகவே வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து தாமாகவே கற்று கொள்வது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |