காதணி வேறு சொல் | Kathani Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காதணி என்பதன் வேறு சொல் என்ன என்பதை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். பெண்கள் அனைவரும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று காதணி. காதில் அணியும் நகைகளை காதணி என்று கூறுவார்கள். நம்மில் பலருக்கும் காதணி என்றால் தோடு, கம்மல் என்று தான் தெரியும். ஆனால், காதணி என்பதை பல்வேறு பெயர்களில் கூறலாம். அதனை பற்றி தான் இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
ஆண்கள் முதல் பெண்கள் வரை காதணி அணிவார்கள். இதில் ஆண்கள் அணிவதை கடுக்கன் என்று கூறுவார்கள். பெண்கள் அணியும் காதணி ஆனது பல்வேறு மாடல்களில் பல்வேறு பெயரில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, காதணியின் விலையும், மாடலும் அதிகரித்து வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம். காதணி என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
காதணி என்றால் என்ன.?
காதில் அணியும் அணிகலன்கள் அல்லது ஆபரணங்கள் காதணி ஆகும். தமிழர் பண்பாட்டில் அணிகலன்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டும். அவற்றில் முக்கியமான அணிகலனாக இருப்பது தோடு என்று சொல்லக்கூடிய காதணிகள் ஆகும். அக்காலத்தில் தலை அணிகள், காதணிகள், கழுத்தணிகள், இடையணிகள், கையணிகள், விரலணிகள் மற்றும் காலணிகள் என பல்வேறு அணிகலன்களை அணிந்துள்ளார்கள். உடலில் காலில், கையில், கழுத்தில், விரலில் என அணியும் உறுப்புகளுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் வகுக்கப்பட்டுள்ளன. அக்கால பெண்கள் முதல் இக்கால பெண்கள் வரை அனைவரும் விரும்பும் அணிகலனாக காதணி இருக்கிறது. பாட்டிகள் காதை சுற்றிலும் காதணி அணிந்து இருப்பார்கள். காதணியின் மேல் அதிக விருப்பம் ஆசை உள்ளவர்கள் பல்வேறு மாடல்களில் காதணியை அணிந்து கொள்வார்கள்.
Kathani Veru Sol in Tamil:
- தோடு
- கம்மல்
- குண்டலம்
- கொப்பு
- ஓலை
- குழை
- இலை
- குவளை
- கொந்திளவோலை
- கன்னப்பூ
- முருகு
- விசிறி முருகு
- சின்னப்பூ
- வல்லிகை
- செவிப்பூ
- மடல்
- டோலாக்கு
- தண்டட்டி
- காதணிகை
- காதரங்கு
- காதொலி
- குவிசொல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் காதணி என்பதற்கு வழங்கப்படும் வேறு சொற்கள்/வேறு பெயர்கள் ஆகும்.
காதணி in English Word:
காதணி என்பதை ஆங்கிலத்தில் Earring என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |