கிமு – கிபி என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Kimu Kipi Information in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் எந்த மனதிருப்தி உங்களுக்கு இருக்கும்.

அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்தற்கான விடை கிடைத்துவிடும். நாம் இன்று கிமு மற்றும் கிபி என்று சொல்வதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிமு – கிபி விளக்கம்: 

பொதுவாக நாம் அனைவருமே புத்தகத்தில் படிக்கும் போது கிமு ஆண்டு மற்றும் கிபி ஆண்டு என்று படித்திருப்போம். ஏன் கிமு – கிபி சொல்கிறார்கள் என்று நமக்குள் பல கேள்விகள் இருக்கும். சிலர் கிமு என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்றும், கிபி என்பது கிறிஸ்து பிறந்ததற்கு பின் என்றும் சொல்லப்படுகிறது. 

ஆனால் வரலாற்று அறிஞர்கள் இந்த கணக்கீடு கிறிஸ்து பிறப்புடன் பொருந்தவில்லை என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று இங்கு காண்போம்.

பொதுவாக இன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டிக்கு கிரிகோரியன் நாட்காட்டி என்று பெயர். இந்த கிரிகோரியன் நாட்காட்டியை ஐ.நா. சபையால் ஏற்று கொள்ளப்பட்ட பின் உலகில் பெரும்பாலான நாடுகள் இந்த நாட்காட்டியை தான் பின் பற்றி வருகின்றன.

இந்திய ரூபாய் நோட்டுகளில் எத்தனை மொழிகள் இருக்கிறது தெரியுமா

அதுபோல கிமு 45 ஆம் ஆண்டில் ஜுலியஸ் சீசர் என்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜுலியன் நாட்காட்டியை திருத்தி வடிவமைக்கப்பட்ட நாட்காட்டி தான் கிரிகோரியன் நாட்காட்டி ஆகும்.

இந்த நாட்காட்டியை இயேசு பிறந்த ஆண்டில் இருந்து தொடங்க வேண்டும் என்று கிரிகோரி விரும்பினார். ஆனால் இயேசு எப்போது பிறந்தார் என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை.

அதன் பின் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்து வந்த டயனீசியஸ் எக்ஸீகுவஸ் என்பவர் உருவாக்கிய “அன்ன டோமினி” முறை என்ற நாட்காட்டி கிடைத்தது.

👉 இந்திய நாணயத்தில் இந்த குறியீடு இருக்க காரணம் என்ன தெரியுமா

 இந்த அன்ன டோமினி முறையில் உள்ளதை கிரிகோரி ‘ஜுலியன் நாட்காட்டியில் அப்படியே பொருத்தி அவர் தனது புதிய நாட்காட்டியை உருவாக்கினார். ஆனால் இயேசுவை பற்றி ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த கிரிகோரியன் நாட்காட்டியின் கணக்கீடு இயேசுவின் பிறப்போடு பொருந்தவில்லை என்று  கண்டறிந்தனர்.   

இதற்கு பின் தான் நம் அரசு பள்ளி பாடப் புத்தகங்களில் 2017 ஆம் ஆண்டில் இருந்து கிமு கிபி என்பதற்கு பதிலாக கிமு என்பது பொது ஆண்டுக்கு முன் என்றும் கிபி என்பது பொது ஆண்டுக்கு பின் என்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது தெரியுமா

 

மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement