குழப்பம் வேறு சொல் | Kulappam Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குழப்பம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். குழப்பம் என்பது எல்லா இடத்திலும் இருக்கும். குறிப்பாக மனிதனுக்கு ஏற்ப்படும் ஒரு உணர்வு என்று கூறலாம். சூழ்நிலைக்கு ஏற்ப குழப்பம் சிறிய அளவிலும் ஏற்படலாம் பெரிய அளவிலும் ஏற்படலாம். இந்த குழப்பம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஏற்படலாம் அல்லது சமூகத்தினரிடையேயோ காணப்படலாம்.
ஒரு செயலை செய்ய முடியாத அளவிற்கு மனதில் குழப்பம் ஏற்படும். பெரும்பாலும், குழப்பத்தில் இரு மனநிலை இருக்கும். இது செய்யலாமா.? அது செய்யலாமா.? இதை வாங்கலாமா.? அதை வாங்கலாமா.? இப்படி குழப்பம் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். நாம் அனைவருமே குழப்பம் என்ற சொல்லினை மட்டுமே பயன்படுத்தி கூறுவோம். ஆனால், குழப்பம் என்ற சொல்லிற்கு பல்வேறு சொற்கள் இருக்கிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
குழப்பம் பொருள்:
குழப்பம் என்பது, ஒரு தனிநபர் தெளிவான மனநிலை இல்லாமல், விரைவாக முடிவு எடுக்க முடியாமல் இருக்கு நிலையை குறிக்கிறது. என்ன நடக்கிறது என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல் தெளிவற்ற மனநிலையில் இருப்பதை குறிக்கிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பதட்டமான நிலையில் இருபத்தை குழப்பம் என்று கூறலாம். குழப்பம் என்பது ஒரு பெயர் சொல்லாகும்.
வேகம் என்பதன் வேறு சொல் என்ன.?
குழப்பம் வேறு சொல்:
- களவரம்
- சிக்கல்
- சஞ்சலம்
- அமளி
- பிறழ்வு
- சச்சரவு
- ஒழுங்கின்மை
- பூசல்
- திகைப்பு
- தாறுமாறு
- சீர்கேடு
- முறைகேடு
- குளறுபடி
- சஞ்சலம்
- மனச்சஞ்சலம்
- மனக்குழப்பம்
- மனக்கவலை
- மனவேதனை
- மனக்கலக்கம்
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் குழப்பம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.
குழப்பம் Meaning in English:
குழப்பம் ஆங்கிலத்தில் Confusion என்று கூறுவார்கள்.
பிரமாதம் என்பதன் வேறு சொல் என்ன.?
எடுத்துக்காட்டு வாக்கியம்:
- மக்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை குழப்பமாக உள்ளார்கள்.
- என்ன சமைக்கலாம்.? என்ற குழப்பத்திலேயே தமிழ் நேரத்தை ஓட்டி விட்டால்.
- குழப்பத்தில் இருப்பவர்கள் ஒரு சரியான முடிவை எடுக்க மாட்டார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |