Licence என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?

licence meaning in tamil

Licence Meaning in Tamil..!

ஹலோ நண்பர்களே… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். Licence என்றால் என்ன..? அதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவின் மூலம் தினமும் எதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் Licence பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன

லைசென்ஸ் என்றால் என்ன: 

லைசென்ஸ் என்பதை தமிழில் உரிமம் என்று கூறுகிறார்கள். பல்வேறு வகையான குடிமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. இந்த உரிமம் என்பதை கொண்டு வந்த பின்னரே சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்க பட்டன. காலப்போக்கில், சில நடவடிக்கைகளில் ஈடுபட உரிமம் வழங்கப்பட்டது.

ஒரு உரிமம் என்பது குறிப்பிட்ட செயல்பாடு அல்லது அதிகாரம் அல்லது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆவணங்களால் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. உரிமையை ஆவணப்படுத்துவது உரிமம் என்று கூறப்படுகிறது.

அதாவது, ஒரு பொருளை சொந்தமாக அல்லது பயன்படுத்த அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு மற்றும் ஒரு வர்த்தகத்தை தொடர்வதற்கு அனுமதி வேண்டும். அப்படி பெறபடும் அனுமதியை தான் உரிமம் என்று கூறுகிறோம்.

MICR பற்றிய தகவல்கள்

லைசென்ஸ் என்பது என்ன:

இன்றைய கால கட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதார நலனை கொண்டு இந்த உரிமம் கொண்டுவரப்பட்டது. அதாவது உரிமம் பெற்ற ஒரு நபர் எந்த ஒரு தொழில் வேண்டுமானாலும் தொடங்கலாம்.

நாட்டைப் பொறுத்து தனிப்பட்ட ஆயுதங்களைப் பொறுத்தும் உரிமம் வழங்கும் நிலைமை வேறுபடுகிறது. உதாரணமாக, பெரும்பாலான அமெரிக்க மாநிலங்களில் சட்டம், உடைமை, துப்பாக்கி அல்லது சுருக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உரிமம் வழங்கப் படவில்லை. லைசென்ஸ் பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது.

வணிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு உரிமம் கட்டாயம் தேவை. அதாவது நீங்கள் ஒரு கடை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல நீங்கள் வாகன ஓட்டிகளாக இருந்தால் அதற்கும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு உங்களுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

அதுபோல இந்த நாட்டில் ஒவ்வொரு விஷயத்திற்கும் உரிமம் வழங்கப்படுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com