தமிழ்நாட்டின் அணைகள்
தமிழ்நாடு பண்டைய காலம் முதல் நீரை சேமித்து அதனை பயன்படுத்தி வருகிறது. ஆதித்த கரிகாலன் தொடங்கி இன்று வரை தண்ணீரை பாசனத்திற்காக சேமிப்பதற்கு பல்வேறு அணைகளை கட்டி எதிர்கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. தழிழ்நாட்டில் 28 க்கும் அதிகமான அணைகள் உள்ளது. ஆனால் நமக்கு தெரிந்தது எல்லாம் அணைகள் மட்டும் தான். இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் பெயர்களும் அது அமைந்து இருக்கும் அமைவிடத்தையும் அணையின் சிறப்பையும் பார்ப்போம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சித்தமல்லி அணை:
சித்தமல்லி அணை அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் வட்டம், கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வணையில் தேங்கும் நீர் நடுவலூர், இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருபுரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி, கார்குடி தெற்கேரி, கோவத்தட்டை ஏரி மற்றும் திருப்புரந்தான் பெரிய ஏரி ஆகியவை வழியாக ஓடி, அணையின் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றை அடைகிறது. இந்த சித்தமல்லி அணை சுமார் 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மொத்தக் கொள்ளவு 226.80 மில்லியன் கனஅடியாகும். இந்த அணையின் மூலம் 1179.02 ஏக்கர் நன்செய் நிலமும், 3901.60 ஏக்கர் புன்செய் நிலமும் என 5080.62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.
காளிங்கராயன் அணை:
காளிங்கராயன் அணை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த காளிங்கராயன் தடுப்பணையாகும் பவானி ஆறும் காவிரி ஆறும் சந்திக்கும் பவானியின் கூடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது.
காளிங்கராயன் என்ற கொங்கு நாட்டுத் தலைவனால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த அணை.
குண்டேரிப்பள்ளம் அணை:
குண்டேரிப்பள்ளம் அணை, ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையத்தின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த அணையின் தெற்குப்பகுதியில் அடர்ந்த மலைக்காடுகள் காணப்படுகிறது.
கொடிவேரி அணைக்கட்டு:
கொடிவேரி அணைக்கட்டு ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள பெரியகொடிவேரியில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 1125ஆம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் இந்த அணை கட்டப்பட்டது.
சூரம்பட்டி அணை:
சூரம்பட்டி அணை, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சிறிய அணையாகும். இந்த அணையானது இரண்டு ஏக்கர் பரப்பளவும், ஏழு அடி உயரமும் தண்ணீரைத் தேக்ககிவைக்ககூடியதாகவும் கட்டபட்டுள்ளது. இதன் நீர் ஆதாரமாக மழை நீரூம், கீழ்பவானி கால்வாயின் கசிவு நீரும் உள்ளது. இந்த அணையில் சேகாரமாகும் நீர் ஊத்துக்குளி பாசன வாய்களில் திறந்துவிடப்படுகிறது.
பவானிசாகர் அணை:
பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும்.
பெரும்பள்ளம் அணை:
பெரும்பள்ளம் அணை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திற்கு அருகே உள்ள ஒரு அணையாகும். இந்த அணைக்கு கடம்பூர் மலை மற்றும் பவானி ஆற்றில் இருந்து மழைநீர் வந்துசேர்கிறது. இந்த அணை சுமார் 2 கிமீ நீளமும், 40 மீட்டர் உயரம் கொண்டதாகவும், 65,29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகவும் உள்ளது
வரட்டுப்பள்ளம் அணை:
வரட்டுப்பள்ளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம் மற்றும் மீன் வளர்ப்பிற்கும், வன விலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது வரட்டுப்பள்ளம் அணைக்கு கல்மடுவு, கும்பரவாணி பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.
மேட்டூர் அணை:
மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிக பெரிய அணையாகும். இந்த அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது.
காமராஜ் சாகர் அணை:
காமராஜ் சாகர் அணை சாந்தி நல்லா நீர்தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. காமராஜ் சாகர் அணை நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பைக்காரா அணை:
பைக்காரா அணை உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுக்கிறது. இந்த பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது.
பூமிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
| இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |














