Mamallapuram Veru Peyargal In Tamil
இன்றைய பதிவில் மாமல்லபுரம் வேறு பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். காஞ்சிபுர மாவட்டத்தில் முக்கிய நகரமாகவும், தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும் உள்ளது. இந்த கோவில் மாமல்லபுரத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இதனை மாமல்லபுரம் கடற்கரை கோவில் என்று அழைக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய நகரமாக விளங்கியது. 440 புராதன சின்னங்களுள் ஒன்றான மாமல்லபுரம் கோவில் 45 அடி உயரத்தை கொண்டுள்ளது. இந்த கோவிலை கட்டுவதற்கு முன் இந்த இடம் துறைமுகமாக இருந்தது. சோழர் காலத்தில் உள்ள சிற்பங்கள் பல்லவர் காலத்தில் உள்ள சிற்பங்களை விட எளிமையானவையாக அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கோவிலை உலக பாரம்பரிய களங்களில் ஒன்று என்று 1984-ல் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது. கற்களால் செய்யப்பட்ட கோவில்களில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் இருக்கும் தேர் சிலைகள், குகைக்கோவில்கள் நல்ல கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, நந்திக் கலம்பகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களில் மகாபலிபுரம் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் மாமல்லபுரம் வேறு பெயர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க…..
மாமல்லபுரம் வேறு பெயர்கள்:
- கடல் மல்லை
- மாமல்லை
- மாமல்லபுரம்
- மஹாபலிபுரம்
- மாமல்லப்பட்டணம்
- மாவலிவரம்
- மாவலிபுரம்
- மாவெல்லிப்பூர்
- மௌவேலிப்பூரம்
- மகாபலிப்பூர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரம் சிறப்புகள்:
இதிலிருக்கும்தேர் சிலைகள், குகைக்கோவில்கள் நல்ல கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள கற்களில் புராண கதைகள், காவிய போர்கள், பேய்கள், கடவுள்கள், விலங்கினங்கள் என அனைத்தும் நளினமாகவும் மக்களுக்கு புரியும் வகையில் கூறப்பட்டுள்ளது. இங்கு ஒன்பது குகைக் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த குகை கோவில்கள் புராணத்தில் உள்ள உண்மை சம்பவங்களை எடுத்து கூறுவதாக அமைந்துள்ளது.
| இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |














