Mangalam Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மங்களம் என்பதற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ் மொழியில் உள்ள பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில், மங்களம் என்றால் என்ன.? அதற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
எனவே, நீங்கள் மங்களம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மங்களம் என்றால் மங்களகரமான, சுபமான என்று பொருள்படும். மங்களம் உண்டாகட்டும் என்று பிறர் கூற நாம் கேட்டு இருப்போம். எனவே, மங்களம் என்பது சுபமானது ஆகும்.
மங்களம் என்றால் என்ன.?
மங்களம் என்பது, நன்மையையும் சந்தோஷத்தையும் குறிக்கும் சொல் ஆகும். மங்களம் என்றால் சந்தோஷமான மற்றும் சுபமான நிகழ்வு ஆகும். வாழ்வின் சிறப்பான நிலையை குறிப்பதே மங்களம் ஆகும். எடுத்துக்காட்டாக, திருமணம், குடமுழக்கு போன்ற சுப நிகழ்ச்சிகளை மங்களம் என்று கூறுவார்கள்.
அதுமட்டுமில்லாமல், மங்களம் என்ற வார்த்தையை பாட்டுகளில், சொற்பொழிவுகளில் அல்லது நூல்களில் ஆரம்பத்திலும் முடிவிலும் பயன்படுத்துவார்கள். “மங்களம் கோஸலேந்திராய” என்பது ராமாயணத்தின் இறுதியில் வரும் ஒரு மங்கள பாடல் ஆகும்.
மண் என்ற சொல்லும் கலம் என்ற சொல்லும் கலந்தே மங்கலம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு, காலப்போக்கில் மருவி மங்களம் என்றாகியது. சிறந்த நாள், நல்ல நாள், சுபமுகூர்த்த நாள் ஆகியவற்றை மங்களகரமான நாள் என்று கூறுவார்கள்.
மங்களமான பொருட்களில் முக்கிய பொருளாகாவும் முதன்மையான பொருளாகவும் கருதப்படுவது மஞ்சள் ஆகும். அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மஞ்சள் பயன்படுத்துவது வழக்கம். மங்களம் என்ற சொல்லானது பழங்காலத்தில் இருந்தே புழக்கத்தில் உள்ளது. கிட்டத்தட்ட திருவள்ளுவர் காலத்தில் இருந்து இன்று முதல் பயன்பாட்டில் உள்ளது.
மங்களம் வேறு சொல்:
- சுபம்
- நிறைவு
- நல்வாழ்வு
- பொலிவு
- மகிழ்ச்சி
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் மங்களம் என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் ஆகும்.
மங்களம் எடுத்துக்காட்டு வாக்கியம்:
- மங்களகரமான இந்த நன்னாளில் உங்களுக்கு எல்லா வளமும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்.
- குழந்தையின் பிறப்பால் வீட்டில் மங்களம் உண்டாகட்டும்.
- வருகின்ற புத்தாண்டை மங்களகரமாக கொண்டாட வாழ்த்துக்கள்.
- உங்கள் திருமண வாழ்க்கை மங்களகரமாக அமையட்டும்.
மங்களம் in English:
மங்களம் என்பதை Auspicious என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |