Mavattam Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் Mavattam Veru Sol in Tamil அதாவது மாவட்டம் என்பதற்கான வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே மாவட்டம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் மாவட்டம் என்ற சொல்லுக்கான வேறு சொல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக மாவட்டம் வேறு சொல் என்ன என்று அறிந்து கொள்வோம் வாங்க..!
மாவட்டம் என்றால் என்ன..?
பொதுவாக ஒரு மாவட்டம் என்பது சில நாடுகளில் உள்ளூர் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு வகை நிர்வாகப் பிரிவு ஆகும். நம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டம் என்பதற்கு ஆங்கிலத்தில் District என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல தற்போது மார்ச், 2020 அன்று இந்தியாவில் 734 மாவட்டங்கள் உள்ளது. அதற்கு முன் 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன. ஆனால் 2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன.
ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது. எனவே இப்படி தான் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.
அமைப்பு வேறு சொல் என்ன தெரியுமா
மாவட்டம் வேறு சொல்:
- நகரம்
- வட்டாரம்
- பிரிவு
- பெருநகரம்
- வளாகம்
- பிராந்தியம்
District Synonym in Tamil:
- Commune
- Community
- Dpartment
- Llocality
- Neighborhood
- Parish
- Precinct
- Region
- Section
- Sector
- Territory
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |