மயில் வேறு பெயர்கள்
நம்முடைய தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் ஆனது மாறுபடும். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பது போல, ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. இதனை பள்ளி பருவத்தில் ஒருசொல் தரும் பலசொற்கள் என்று படித்திருப்போம். ஆனால் நாளடைவில் நம்முடைய பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடமாக ஒருசொல் தரும் பல சொற்களை கொடுத்திருப்பார்கள்.
இதற்கான விடை தெரியாமல் கூகுளில் தேடுவோம். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையயில் மயில் என்பதற்கான வேறு சொற்களை பற்றி கொடுத்துள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் அரசு பொது தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
மயில் என்றால் என்ன?

மயில் என்பது ஒரு பறவை இனத்தை சிறந்தது. இதில் ஆண் மயில், பெண் மயில் என்ற வகைகள் இருக்கிறது. பெண் மயில்கள் விட ஆண் மயில்கள் ஆனது அழகாக இருக்கும்.தோகை பெரிதாக இருப்பதும் ஆண் மயிலுக்கு தான். இவை தோகையை விரித்தால் அவ்வளவு அழகாக இருக்கும். மயில்களுக்கு புராணங்களிலும், கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. மயில்கள் மத வழிபாடுகளில் முக்கிய பங்கு முருக பெருமானின் வாகனமாகவும், சரஸ்வதிக்கு அடையாளமாகவும் திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் தேசிய பறவை ஆகவும் இருக்கிறது.
இப்படி சிறப்பு வாய்ந்த மயிலுக்கு பல பெயர்கள் இருக்கிறது, அதனை பற்றி அறிந்து கொள்ள இந்த பதவி முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
மயில் வேறு சொல்:
முருகனுடைய வாகனமான மயிலை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
மயில் என்பதனை சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், மயூரம், மஞ்சள் (மஞ்சை), கலாபி, நவிரம், பீலி, கேகயம். என்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.
ஆண் மயிலை சேவல் என்றும் அழைப்பார்கள்.
மயில் தொகை வேறு பெயர்கள்:
பீலி, மயிர்ப்பிலி போன்ற வார்த்தைகளால் மயில் தோகை என்பதனை அழைக்கலாம்.
மயில் ஆங்கில பெயர்:
ஆண் மயில் பெயர் peacock பெண் மயில் பெயர் peahen ஆகும்.
மயில் என்ற பெயர் வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














