மேன்மை என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

மேன்மை வேறு சொல் | Menmai Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மேன்மை என்பதை வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வேறு சொல் என்பது, ஒரு சொல்லின் பொருளை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். இதுபோன்ற வேறு சொற்கள் தரக்கூடிய தமிழ் சொற்கள் நிறைய இருக்கிறது. ஆனால், இதுபோன்ற வேறு சொற்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால், தேர்வுகளில் இதுபோன்ற வேறுசொற்கள் அடங்கிய கேள்விகளை அதிகம் வரும்.

எனவே, நாம் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொண்டால் மட்டுமே, அந்த கேள்விகளுக்கான சரியான பதிலை அளிக்க முடியும். ஆகையால், நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மேன்மை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

ராசிபலனில் உள்ள தனம் என்பதற்கான அர்த்தம்..!

Menmai Veru Sol in Tamil:

  • உயர்வு
  • கியாதி,
  • கீர்த்தி
  • கௌரவம்
  • புகழ்
  • பெருமை
  • மரியாதை
  • சிறப்பு
  • செழிப்பு
  • மதிப்பு
  • தகுதி
  • பெருமை
  • சிறந்த நிலை
  • உன்னதம்
  • முன்னேற்றம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் மேன்மை என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும் மேன்மை என்பதை உயர்வு என்று கூறுவார்கள்.

மேன்மை பொருள் | Menmai Porul in Tamil:

மேன்மை என்றால் உயர்ந்த நிலை என்று பொருள்படும். மற்றவர்களை விட மேலாக இருக்கின்ற நிலை அல்லது நீங்கள் முன்பு இருந்ததை விட சற்று உயர்ந்த நிலையில் இருப்பதை மேன்மை என்று கூறுவார்கள். மேன்மை என்பது அனைத்து இடங்களிலும் சூழ்நிலையிலும் மற்றும் பொருளிலும் உள்ள உயர்ந்த  நிலையை குறிக்கும்.

வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு மேன்மை ஆகும்.

செல்வம், மனவலிமை, அறிவு, திறமை, ஆரோக்கியம் இதுபோன்று பல வகைகளில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதையும் இருக்கப்போவதையும் குறிக்கும் சொல் மேன்மை ஆகும்.

ராசிபலனில் உள்ள திடம் என்பதன் அர்த்தம்..!

மேன்மை ராசி பலன் பொருள்:

ராசிபலனில் உள்ள மேன்மை என்ற சொல்லின் பொருள் என்னவென்றால், நீங்கள் முன்பு இருந்த நிலையை விட சற்று உயர்ந்த நிலையில் இருப்பதை குறிக்கும். ஜோதிடத்தின்படி, மேன்மை என்பது கிரகத்திற்கான விழிப்புணர்வு இடமாகும்.

மேன்மை எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • தமிழ் இலக்கியத்தின் மேன்மை உலகெங்கும் பரவி இருக்கிறது.
  • தமிழ் என்ற மாணவன், படிப்பில் மற்ற மாணவர்களை விட படிப்பில் மேன்மை அடைந்துள்ளான்.
  • அறிவு மற்றும் கல்வியில் அவர் எப்போதும் மற்றவர்களை விட மேன்மை பெற்றவர்.
  • ஒருவரின் நன்னடத்தை ஆனது, அவரின் மேன்மையை வெளிப்படுத்தும்.

Menmai in English:

  • Greatness
  • Predominance
  • Ascendant
  • Superiority
இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement