உங்கள் போன் Charger -ல் இது போன்ற Symbols இருக்கிறதா..? அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Mobile Charger Symbol Meaning in Tamil..!

வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் கண்டிப்பாக இருக்கும். போன் இல்லாத வீடுகளும் இல்லை, மனிதர்களும் இல்லை. போன் இருந்தால் அதற்கு சார்ஜர் கட்டாயம் இருக்கும்.

அந்த Charger -ல் சில சின்னங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? அந்த சின்னங்களுக்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? இன்று நாம் இதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்க நண்பர்களே Charger-ல் இந்த Symbols ஏன் இருக்கிறது, அதற்க்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

போன் சார்ஜரில் உள்ள சின்னங்களின் காரணம் என்ன..?  

நாம் பயன்படுத்தும் Charger -ல் சில சின்னங்கள் குறிக்கபட்டுள்ளன. அந்த சின்னங்கள் உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் குறியீடுகள் ஆகும். நீங்கள் பயன்படுத்தும் Charger உங்கள் போன் சம்மந்தப்பட்டதாக இருக்கலாம்.

அல்லது பிரபலமான நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் Charger ஆக கூட இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் மொபைலுக்கு எந்த   பிரச்சனையும் இல்லை. அந்த வகையில் இந்த குறியீடுகள் பாதுகாப்பான அதிகாரபூர்வ அடையாளங்களாக உள்ளன.

நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களுக்கும் சார்ஜர் கட்டாயம் இருக்கும். அதுபோல அந்த சார்ஜரில் சில குறியீடுகளும் இருக்கும். அந்த குறியீடுகளுக்கான காரணத்தை இங்கு பார்ப்போம்.

Double Insulation Symbol In Tamil: 

Double Insulation Symbol

இந்த Double insulation symbol என்பது உங்கள் மொபைலை பல மடங்கு பாதுகாப்பாக வைத்து கொள்ளும் என்பதை குறிக்கிறது. அதாவது, இது உங்கள் மொபைலை இரண்டு மடங்கு பாதுகாப்பாக வைத்திருக்கும்.

இந்த குறியீடு உள்ள சார்ஜரை பயன்படுத்தினால் உங்கள் போனிற்கு எந்த பிரச்சனையும் வராது என்பதை குறிக்கிறது. Double insulation என்பது சார்ஜரில் உங்கள் பாகங்களால் உங்களுக்கு எந்த ஒரு எலக்ட்ரிக்கல் ஆபத்தும் வராத வகையில் இந்த சார்ஜர் இருக்கும்.

அதனால் தான் இந்த குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Double insulation சிம்பல்  உள்ள சார்ஜரை பயன்படுத்துவதால் ஷாக் அடிக்கும் அபாயத்தை தவிர்க்கலாம்.

UL Symbol In Tamil:

ul symbol

இந்த UL Symbol சார்ஜரை அதிகம் வெப்பம் அடையாமல் வைத்திருக்கும் என்பதை குறிக்கிறது. இந்த UL Symbol உள்ள சார்ஜரை பயன்படுத்துவதால் அதிகம் வெப்பம் அடையாமல் இருக்கும்.

Home Symbol In Tamil: 

Home Symbol

இந்த Home Symbol கொடுக்கப்பட்டதற்கான காரணம் இந்த குடியீடு உள்ள சார்ஜரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் எந்த வித எலக்ட்ரிக்கல் பிரச்சனையும் வராது என்பதை குறிக்கிறது. இதனால் எந்த வித வோல்ட்டேஜ் பிரச்சனையும் வராது. மேலும் இந்த குறியீடுகள் உள்ள சார்ஜர் தரமானதாக இருக்கும் என்பதை குறிக்கிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com