முடிவு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

முடிவு வேறு சொல் | Mudivu Veru Sol

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முடிவு என்பதற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். முடிவு என்பது இறுதி நிலை என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், முடிவு என்பதை குறிக்கும் வேறு பெயர்கள்/வேறு சொற்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிலை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதேபோல், அந்த சொல்லினை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். எனவே ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான சொற்களை பயன்படுத்தி கூறுவார்கள். எடுத்துக்காட்டாக, உறக்கம் என்பதை தூக்கம் என்று சொல்வார்கள். உறக்கம் என்று சிலர் சொல்லுவார்கள், தூக்கம் என்று சிலர் கூறுவார்கள். அதேபோல், முடிவு என்ற சொல்லினை குறிக்கும் பல்வேறு சொற்கள் உள்ளது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. எனவே, நீங்கள் முடிவு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முடிவு என்றால் என்ன.? 

முடிவு என்பது இரண்டு விதமான அர்த்தங்களை குறிக்கிறது. ஒன்று, நிறைவுற்ற இறுதி நிலையை குறிக்கிறது. மறுபுறம், ஒருவர் எடுக்கும் தீர்மானங்களையும் குறிக்கிறது. எனவே, முடிவு என்பது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாறுபடும்.

தொடக்கம் வேறு சொல்

முடிவு எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

  • நான் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேரலாம் என்று முடிவு எடுத்துள்ளேன்.
  • இந்த முறை கோடைகால விடுமுறைக்கு கொடைக்கானல் செல்ல முடிவு எடுத்துள்ளோம்.
  • காவிரி ஆற்றின் முடிவு வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • பாட்டி, 80 வயதில் இயற்கை எய்தினார். இதுவே அவருடைய இறுதிகாலம் (முடிவு காலம்) ஆகும்.

முடிவு என்பதன் வேறு சொல்:

  • ஈறு
  • அந்தம்
  • இறுதி
  • அறுதி
  • அந்தகம்
  • முற்று
  • கடை
  • எல்லை
  • நிறைவு
  • பூர்த்தி
  • தீர்வு
  • தீர்மானம்
  • இறுதி நிலை 
  • கடைசி நிலை

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் முடிவு என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.

முடிவு in English:

  • Result
  • Denouement
  • Conclusion
  • Decision
  • End
  • Termination

முடிவு என்பதை ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுவார்கள். பெரும்பாலும் முடிவு என்பதை ஆங்கிலத்தில் End என்று கூறுவார்கள்.

சந்தேகம் வேறு சொல்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement