முகம் வேறு சொல்
இன்றைய பதிவில் முகம் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்று முகத்தின் மேல் அதிக அக்கறை காட்டுவோம். குறிப்பாக பெண்கள் அனைவரும் எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று விழாவிற்கு ஒரு வாரம் முன்பாகவே தன் முகத்தை அழகு படுத்துவார்கள். முகத்திற்கான வேறு சொல் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
முகத்தை பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் அழகு படுத்துவார்கள். முகத்திற்காகவே தனியாக பார்லர்(Parlour) சென்று செலவு செய்து தன்னை அழகு படுத்துவார்கள். ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றால் தான் மற்றவர்கள் முன் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் தன் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான். முகத்திற்கான வேறு சொல் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
என்றென்றும் முகம் இளமையாக அப்படியே இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்…!
முகம் என்றால் என்ன?
முகம் என்பது மனிதனை அடையாளம் காண்பதற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. முகம் என்பது உணவை முகக்கும் வாய், உயிர்க்காற்றை முகக்கும் மூக்கு, பார்வையை முகக்கும் கண்கள், கேட்டல் சக்தியைப் பெறும் காதுகள் போன்ற உறுப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வடிவில் முகம் இருக்கும் அப்போதுதான் நாம் எல்லாரையும் அடையாளம் காண முடியும்.
முகம் வேறு சொல்:
- முகம்
- மூஞ்சி
- முகரை
- முகனை
முகம் என்ற சொல்லுக்கான சொல்வளம்:
- முகமன்
- முகமலர்ச்சி
- முகப்பொலிவு
- முகபாவனை
- முகக்கவசம்
- நேர்முகம்
- பாராமுகம்
- முகராசி
- முகத்திரை
- முகஜாடை
- முகச்சாயல்
முகம் in English:
- Face
- Appearance
வாக்கியம்:
- அவருக்கு வட்டமான முகம்.
- அவளுக்கு நீண்ட, மெல்லிய முகம்.
- அவள் முகத்தில் ஒரு பெரிய சிரிப்பு இருந்தது.
- அவன் முகத்தில் ஒரு குழப்பமான தோற்றம் இருந்தது.
- அவன் மகிழ்ச்சியற்றவனாக இருந்ததை அவனுடைய முகத்திலிருந்து என்னால் பார்க்க முடிந்தது.
- அவள் முகத்தை என்னால் மறக்கவே முடியாது.
அன்பளிப்பு என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |