வங்கி கணக்கு
இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் பணத்தின் தேவையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு அனைவரும் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தையோ அல்லது தொழில் செய்வதன் மூலம் வரும் பணத்தையோ அனைவரும் சொந்தமாக அவரவருடைய பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து இருக்கிறார்கள். பணம் திடீரென தேவைப்பட்டாலும் அதனை உடனே ATM கார்டு மூலம் எடுத்து பயன்படுத்து கொள்கின்றனர். இப்படி இருந்தாலும் கூட ஒரு நபர் எத்தனை வங்கி கணக்குகளை அவருடைய பெயரில் வைத்திருக்கலாம் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
Multiple Bank Accounts Good or Bad:
இன்றைய காலத்தை பொறுத்தவரை அனைவரிடமும் சொந்தமாக ஏதோ ஒரு வங்கியில் கட்டாயமாக வங்கி கணக்கு இருக்கிறது.
அந்த வங்கி கணக்கில் அவருடைய பெயரில் பணம் போடுதல் மற்றும் எடுத்தல் போன்ற வரவு செலவினை செய்து வருகின்றனர். இப்படி இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு 1 வங்கியில் மட்டும் இல்லாமல் 2 அல்லது 3 வங்கியில் கூட வங்கி கணக்கு இருக்கும்.
ஒருவர் அவருடைய பெயரில் நிறைய வங்கி கணக்குகள் வைத்து இருக்கலாமா என்று கேட்டால்..? கட்டாயமாக அப்படி வங்கி கணக்குகள் வைத்து இருக்கலாம். ஆனால் அப்படி வைத்து இருப்பதிலும் சில நன்மைகள் பற்று தீமைகள் இருக்கிறது.
நன்மைகள்:
ஒருவர் அவருடைய பெயரில் நிறைய வங்கி கணக்குகள் வைத்து இருப்பதால் ஒரு வங்கி கணக்கில் ஏதாவது பிரச்சனை என்றால் மற்றொரு வங்கி கணக்கை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல நீங்கள் தனித்தனியாக வங்கி கணக்கு வைத்து இருந்தீர்கள் என்றால் ஒன்றில் வீட்டு தேவைகளையும் மற்றொன்றில் சம்பளம் தொகை மற்றும் வேறொன்றில் வீட்டுக்கு தேவையான பில்களை கட்டுதல் என பிரித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இதன் மூலம் என்னென்ன தேவைகளுக்கு எவ்வளவு செலவுகள் ஆகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். நிறைய வங்கி கணக்குகள் வைத்து இருப்பதால் நிறைய ATM கார்டுனை பயன்படுத்தி அதன் மூலம் நன்மையை பெறலாம்.
இதுவே நிறைய வங்கி கணக்குகள் வைத்து இருப்பதின் நன்மைகள் ஆகும்.
தீமைகள்:
நீங்கள் எப்படி நிறைய வங்கி கணக்குகள் வைத்து இருப்பதில் நன்மைகள் இருக்கிறதோ அதே அளவில் சில தீமைகளும் இருக்கிறது.
நிறைய வங்கி கணக்குகளை உங்களுடைய பெயரில் வைத்து இருக்கும் போது ஒவ்வொன்றிற்கும் சரியாக உங்களுடைய பெயரில் இருக்க வேண்டிய இருப்பு தொகையினை வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை அப்படி வைத்திருக்க தவறினால் அதற்கு என்று தனியாக அபராத தொகை சேர்த்து உங்களுக்கு விதிக்கப்படும்.
அதுபோல நீங்கள் 3 வங்கி கணக்கு வைத்து இருக்கிறீர்கள் ஆனால் அதில் ஒன்றை மட்டும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விட்டீர்கள் என்றால் உங்களுடைய வங்கி கணக்கு தற்காலிகமாக Close செய்யப்படும்.
நீங்கள் நிறைய வங்கி கணக்குகள் வைத்து இருப்பதால் அதனை Maintain செய்வது கடினமாக இருக்கும்.
ஆகவே இந்த இரண்டினையும் சரியாக நீங்கள் மேலும் ஆலோசனை செய்து உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்கள் நிறைய கணக்குகள் வைத்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ ATM கார்டு இல்லாமல் Indian Bank ATM -ல் பணம் எடுப்பது எப்படி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |