வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முழுமை வேறு சொல்

Updated On: February 28, 2025 1:13 PM
Follow Us:
mulumai veru sol
---Advertisement---
Advertisement

முழுமை வேறு சொல் 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கல்வி அறிவு மட்டும் நமக்கு இருந்தால் போதும் அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். அப்படி பார்த்தால் கல்வி அறிவு என்பது நமக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட இவற்றிற்கு அப்பால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பேசும் மற்றும் எழுதும் வார்த்தைகள் ஏராளமாக இருந்தாலும் கூட அதில் சில அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய தமிழ் மொழியில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கின்றது. இந்த வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றது. இந்த அர்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தத்தை மட்டும் தான் அறிந்திருப்போம். அது போல ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. அதனை பற்றியும் அறிந்திருக்க மாட்டோம். நம்முடைய குழந்தைகளுக்கு வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் முழுமை என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

முழுமை என்றால் என்ன.?

நம்முடைய தமிழ் மொழியை பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள், பல சொற்கள் இருக்கிறது. இந்த சொற்கள் அனைத்தும் நாம் பயன்படுத்தும் இடத்தை அர்த்தங்கள் மாறுகின்றது. அதில் முழுமை என்பதும் நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் மாறுகின்றது. முழுமை என்பது ஒரு விஷயத்தை முழுவதுமாக ஏற்று கொள்வது அல்லது செய்து முடிப்பதை குறிக்கிறது. இதனை எடுத்துக்காட்டுடன் கீழே விளக்கியுள்ளேன் அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

  1. நான் இன்று தேர்விற்கு முழுமையாக தயார் படுத்திக்கொண்டேன்.
  2. நான் முழு மனதாக சமையலை செய்கின்றேன் அல்லது நான் சைவ உணவுகள் செய்வது எப்படி என்று முழுமையாக கற்று கொண்டேன்.
  3. இன்று கதை புத்தகத்தை முழுமையாக படித்தேன்.
  4. இன்று பணிகளை முழுமையாக முடித்து போல நாளையும் முழுமையாக முடிக்க வேண்டும்.
  5. தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி  பெற்றால் அவன் தனது கல்வியில் முழுமை பெற்றான்.
  6. ஏதோ ஒன்றில் ஆராய்ச்சி செய்யும் போது அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டால் அதனை முழுமையான ஆய்வு என்று கூறலாம்.

முழுமை வேறு பெயர்கள்:

  • நிறைவு
  • பூரணம்
  • முழுவதும்
  • அனைத்தும்
  • எல்லா
  • சகல
  • ஒட்டுமொத்த

மேல் கூறியுள்ள வார்த்தைகளால் முழுமை என்ற வார்த்தையை அழைக்கலாம்.

முழுமை in English:

முழுமை என்பதை completeness, entirety, consummation ஆங்கிலத்தில் இப்படியெல்லாம் அழைக்கலாம்.

அற்புதம் வேறு சொல்
கடினம் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now