முறத்தின் வேறு சொல் என்ன தெரியுமா.? | Muram Veru Sol

Advertisement

முறம் வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முறம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் /வேறு பெயர்கள் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அனைவரது வீடுகளிலும் முறம் இருக்கும். ஆனால், இப்போது அதனை குப்பை அள்ளுவதற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். முறம் என்பது, தானியங்களில் இருக்கும் கல், உமி, தூசு போன்ற பொருட்களை பிரித்தெடுக்க பயன்படுத்தும் கருவி ஆகும். இதனால் பெரும்பாலும் அக்காலத்தில் தான் பயன்படுத்தினார்கள். குறிப்பாக சொல்லப்போனால், அக்காலத்தில் முறம் இல்லாமல், எந்தவொரு வேலையும் முழுமை பெறாது.

வயலில் நெற்பயிர்களை அறுத்தவுடன், அதனை நெற்களத்திற்கு கொண்டு வந்து, நெற்பயிர்களை அடித்து, நெல்களையும் மட்டும் தனியே பிரித்து எடுப்பார்கள். அதன் பிறகு, அவற்றில் நல்ல நெல்லும் இருக்கும், கெட்ட நெல்லும் இருக்கும். இதனை கருக்கா என்று கூறுவார்கள். இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. ஆகையால், அதனை நல்ல நெல்களில் இருந்து பிரித்தெடுப்பார்கள். இவ்வாறு பிடித்தெடுக்க முறத்தினை பயன்படுத்துவார்கள். முறத்தில் நெல்லினை எடுத்து, அதனை காற்று வீசும் திசையில் வீசுவார்கள். இவ்வாறு செய்யும்போது நல்ல முத்தான நெல்கள் ஒரு புறமும், லேசாக உள்ள கருக்கா நெல்கள் ஒரு புறமும் விழும். இதன் மூலம் இரண்டினையும் பிரித்து எடுப்பார்கள். இவ்வாறு பயன்படுத்தப்படும் முறத்திற்கு பல வேறு சொற்களும் உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கும் அதன் வேறு பெயர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

முறம் வேறு சொல்

Muram Veru Sol in Tamil:

Muram Veru Sol in Tamil

முறம் என்பதை சொலவு, சுளகு என்று கூறுவார்கள். எனவே, முறம் என்பதற்கான வேறு சொற்கள் சொலவு, சுளகு என்பதாகும். 

முறம் என்பது நெல், கோதுமை போன்ற தானியங்களில் இருக்கும் கல், உமி, தூசு போன்ற பொருட்களை பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராமப்புற மக்கள், தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுத்தும் கருவி ஆகும். இவ்வாறு முறத்தினை பயன்படுத்தி பிரித்தெடுப்பதை புதைத்தல் என்று கூறுவார்கள்.

முறத்தில் பல வகைகள் உள்ளது. அக்காலத்தில் பெரும்பாலும் மூங்கிலால் செய்யப்பட்ட முறத்தினை பயன்படுத்துவார்கள். இப்போதும் பல வீடுகளில் மூங்கிலால் செய்யப்பட்ட முறம் இருக்கிறது. அதனை, பசுவின் சாணம் கொண்டு பூசி, வெயிலில் காயவைத்து வைப்பார்கள். இவ்வாறு செய்தல் முறம் நீண்ட நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும்.

பாத்திரம் வேறு சொல்..!

இப்போது, பெரும்பாலும் பிளாஸ்டிக் முறம் தான் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் அதுவும் இருக்காது. குப்பை அள்ளுவதற்கு மட்டும் முறம் வைத்து பயன்படுத்துகிறார்கள்.

முறத்தை பயன்படுத்துவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதன்படி புதைத்தாள் மட்டுமே தூசு, கல் போன்றவை தானியங்களை விட்டு நீங்கும். தானியத்தை முறத்தில் போட்டு, கைகளால் மெதுவாக தட்டினால் எடை வேறுபாட்டினால் தானியங்கள் தனியே வரும், அதில் உள்ள கல், உமி, தூசு போன்ற பொருட்கள் தனியே விழும். இவ்வாறு எல்லாராலும் புடைக்க முடியாது. பாட்டிகள் எல்லாம்  முறத்தினை நன்றாக புடைப்பார்கள். அவர்கள் புடைப்பதை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

Muram Veru Sol

முறத்தினை கொண்டு புலியை விரட்டி அடித்த கதை பற்றி நாம் அறிந்து இருப்போம். முன்காலத்தில் நெற்களத்தில் ஒரு பெண் தூற்றிக்கொண்டிருந்த போது, அப்போது ஒரு புலி வந்ததாகவும், அதனை முறத்தை கொண்டு விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.

முறம் in English:

முறம் என்பதை ஆங்கிலத்தில் Winnow என்று கூறுவார்கள்.

முறம் எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • புலியை முறத்தால் விரட்டிய வீரத் தமிழ்ப் பெண்.
  • பிளாஸ்டிக் முறத்தை விட மூங்கில் பட்டைகளால் செய்யப்பட்ட முறம் நன்மை தரக்கூடியது.
  • முறத்தை பயன்படுத்தி அரிசியில் உள்ள கற்கள் மற்றும் தூசுகளை பிரித்து எடுப்பார்கள்.

அம்மி ஆங்கில பெயர்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement