Nankidai Veru Sol in Tamil | நன்கொடை வேறு சொல்
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நன்கொடை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி அறிவு என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அதிலும், தமிழ் மொழியில் உள்ள அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். தமிழ் மொழியிலே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளது. அவற்றில் ஒன்று தான் வேறு சொல்.
வேறு சொல் என்பது ஒரு சொல்லின் அர்த்தத்தை குறிக்கும் சொற்கள் ஆகும். இதுபோன்ற வேறு சொற்கள் தமிழ் மொழியில் அதிகம் உள்ளது. ஆனால், அவை அனைத்தையும் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருங்க வாய்ப்பில்லை. இதுபோன்ற வேறு சொல் அடங்கிய கேள்விகள் போட்டி தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளுவது மிகவும் அவசியம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு தமிழில் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில், நன்கொடை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
முறத்தின் வேறு சொல் என்ன தெரியுமா.?
நன்கொடை என்றால் என்ன.?
நன்கொடை என்பது, ஒரு நல்ல விஷயத்துக்காக ஒருவர் வழங்கும் பொருள் அல்லது பணம் நன்கொடை ஆகும். நன்கொடை என்பது பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படுகிறது. முற்காலத்தில் மன்னர்களே நன்கொடை வழங்கி சமூக சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள். பாரி மன்னன் முல்லை கொடிக்கு தேர் கொடுத்தான். என்பது நம் அனைவர்க்கும் தெரியும். இதுபோன்ற பல மன்னர்கள் நன்கொடை வழங்கும் உள்ளங்களாக இருந்துள்ளார்கள். முக்கியமாக, மக்கள் எவ்வித துன்பமும் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகளில் பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்கள்.
நன்கொடை என்பதன் வேறு சொல்:
- கொடை
- தானம்
- பரிசு
- அன்பளிப்பு
- சன்மானம்
- வெகுமதி
- இனாம்
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் நன்கொடை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.
| இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














