Neram Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி கூறி வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக Neram Veru Sol in Tamil அதாவது, நேரம் என்பதன் வேறு பெயர்கள் என்ன..? நேரம் என்பதை வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக பலரும் நேரம் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை தேடி இருப்பீர்கள். ஆகையால் இந்த பதிவின் வாயிலாக அதை பற்றி முழுதாக படித்தறியலாம் வாங்க..!
நேரம் என்றால் என்ன..?
பொதுவாக நேரம் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். பெரியவர்களோ அல்லது ஆசிரியர்களோ படிக்கும் போது நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று சொல்வார்கள். இந்த வார்த்தையை நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்டிருப்போம்.
பகல் இரவாகவும், இரவு பகலாகவும் மாறுவதைப் போல, அன்றாட வாழ்க்கையில், நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
சரி நேரம் என்பதை நிரூபிக்க மனிதன் சூரியனை வைத்து பகல் இரவு, நாள், வாரம், மாதம், வருடம் என பிரித்து வைக்க முடிகிறது. அதாவது நேரம் என்பது வரலாற்று அடிப்படையில், பொருள் தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
நேரம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறு. அதேபோல நேரம் அதன் ஒரு பரிமாணம் என்றும் கூறப்படுகிறது.
இதன்படி, இதில் நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன. நேரம் என்பது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கொண்டிருந்த இயல்பியல் நோக்கு என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல நேரத்தை அளக்க பல கருவிகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடுத்துக்காட்டு:
- எனக்கு நேரமே சரியில்லை போல எல்லாமே கேட்டதாகவே நடக்கிறது.
- நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது, சீக்கிரம் வேலையை பார்.
- நீ செய்கின்ற செயலுக்கு எல்லாம் காலம் ஒரு நாள் உங்களுக்கு பதில் சொல்லும்.
நேரத்தை அளக்கும் கருவிகள்:
- மணல் கடிகாரம்
- சூரியக் கடிகாரம்
- நீர் கடிகாரம்
- மின்னணு கடிகாரம்
- ஸ்டாப்வாட்ச்
நேரத்தின் அலகுகள்:
நேரத்தின் அலகுகள் நொடி, நிமிடம் மற்றும் மணிநேரம் ஆகியவை ஆகும். அதுவே நேரத்தின் பெரிய அலகுகள் நாள், வாரம், மாதம் மற்றும் ஆண்டுகள் ஆகும்.
1 மணிநேரம் =60 நிமிடங்கள்
1 நிமிடம் =60 வினாடிகள்
கடிகாரங்களில் கிடைக்கும் மிகச்சிறிய அளவு ஒரு வினாடி என்பது ஆகும்.
நேரம் வேறு சொல்:
நேரம் என்பதனை பல வார்த்தைகளால் அழைக்கலாம். ஆனால் நம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் மாறுபடும். அதனால் நேரம் என்பதை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- நேரம்
- காலம்
- சகாப்தம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |