NFT பற்றிய விரிவாக்கம்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காமில் NFT என்றால் என்ன என்பதை பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். NFT என்றால் (Non Fungible Token) என்று சொல்லப்படுகிறது. இந்த NFT என்பது கோடிக்கணக்கில் விலை போகிறது என்றும் சொல்லப்படுகிறது. Beeple என்ற ஒருவர் 5000 நாட்கள் வரைந்த படத்தை ஒரே படச்சட்டமாக செய்திருக்கிறார். அதை நம் தமிழகத்தில் இந்த NFTஐ 500 கோடி மேல் கொடுத்து விக்னேஷ் சுந்தரேசன் வாகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு Fungible Token மற்றும் Block Chain பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அப்படி இந்த NFT-யில் என்ன உள்ளது என்பதை தெளிவாக படித்து அறியலாம் வாங்க..
பிட் காயின் பற்றி தெரியுமா உங்களுக்கு? |
What is Fungible Token:
Fungible Token என்பது மதிப்பு சமமாக இருக்கும் அதனை யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வைத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டு:
இந்த Fungible Token என்பது எளிமையாக கூறவேண்டும் என்றால் தற்போது உங்களிடம் ஒரு 500 ரூபாய் உள்ளது அதை நீங்கள் உங்களுடைய நண்பனுக்கு அப்படியில்லை என்றால் தெரிந்தவர்களுக்கு அந்த 500 ரூபாயை கடனாக தருகிறீர்கள். மறுநாள் நீங்கள் கடனாக கொடுத்த அந்த 500 ரூபாய் ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களாக தரப்படுகிறது. இதில் சம மதிப்பை பெறுவதன் மூலம் ஒருவருக்கொருவர் தங்களின் பொருளின் மதிப்பை மாற்றிக்கொள்வதன் மூலம் நடைபெறும் நிகழ்வுதான் Fungible Token என்று அழைக்கப்படுகிறது.
What is Non Fungible Token:
Non Fungible Token என்பது அதற்கென்று ஒரு தனி மதிப்பு இருக்கும். அதாவது அதற்கென்று ஒரு வரலாறு, தனித்துவம் இருக்கும். அதாவது நீங்கள் சொந்தமாக வரைந்த படத்தையோ அல்லது பாடல்களையோ NFT-யாக மாற்றிவிட்டால் அதன் உரிமையாளராக நீங்கள் இருப்பீர்கள். இதனால் NFT-யின் உரிமையாளர் யார் என்று எளிதாக கண்டறிய முடியும்.
எடுத்துக்காட்டு:
Non Fungible Token என்பது உதாரணத்திற்க்கு மஹாத்மா காந்தியின் கண்ணாடிக்கு தனி ஒரு மதிப்பு இருக்கிறது. இப்போ நான் என்னுடைய கண்ணாடியை எடுத்து வைத்துவிட்டு இது தான் காந்தின் கண்ணாடி என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு பழமைவாய்ந்த புகைப்படத்தை படம் எடுப்பதோ அல்லது அச்சிட்டு வரைந்தாலோ சரி, ஆனால் அதனுடைய உரிமையாளரின் படத்திற்கு தான் முக்கியத்துவம் அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு மோனாலிசா படத்தை கூட சொல்லலாம். இந்த படத்தின் விலை மதிப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனை மறுபடியும் நீங்கள் வரைந்தால் இதன் உண்மையான உரிமையாளர் நீங்கள் ஆகவே முடியாது. இதைத்தான் Non Fungible என்று அழைக்கப்படுகிறது.
NFT முக்கியத்துவம்:
NFT என்பது நீங்கள் வாங்கும் டிஜிட்டல் சொத்துக்களின் பிரதிநிதியாகும். டிஜிட்டல் சொத்துக்களான இசை, ஓவியம், கலை பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கப்பட்ட செயற்கை கணினி இதில் அடங்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு குரங்கு படத்தை கொண்டுள்ளது. இந்த NFT ஆனது கேமிங்யில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, டிஜிட்டல் சொத்துக்களை சேமிக்கப்படும் தகவல் என்று சொல்லப்படுகிறது.
இந்த NFT யை தற்பொழுது எல்லாரும் ஒரு அந்தஸ்தாக கருதப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
NFT யில் Block Chain Technology மூலம் ஒரு முக்கிய பங்கு பெற்றுவருகிறது. இதனால் இந்த NFT மிகவும் பிரபலமாக இருக்கிறது.
NFT என்பது குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்கவும் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் புதிதாக வந்துள்ள கலைக்கர்களுக்கு இந்த NFT ஒரு முக்கிய படைப்புகளை விற்க ஒரு முக்கிய விற்பனை தலமாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த NFT ஒரு மிகப்பெரிய அந்தஸ்தாக இருப்பதால் இதனை கோடிக்கணக்கில் வாங்கின்றனர். இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்களும் ஒரு NFT யை உருவாக்கி விற்கவும் முடியும்.
கிரிப்டோ கரன்சியின் வேறுபட்ட வடிவம் தான் NFT என்று அழைக்கப்படுகிறது. நிஜத்தில் இருக்கும் சொத்துக்களின் பிரதிநிதியாக NFT பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |