நூல் வேறு சொல்

Advertisement

நூல் வேறு சொல்

இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் பெயர்கள் என்பது இருக்கிறது. அதில் ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் தான் பல பெயர்கள் இருக்கிறது. அதாவது வீட்டில் ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார்கள். சான்றிதழில் ஒரு பெயர் இருக்கும். இதெல்லாம் போதாது என்று நண்பர்கள் ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார்கள்.

இது போல நம்முடைய தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. எடுத்துக்காட்டாக சந்தோசம் என்பதை மகிழ்ச்சி, ஆனந்தம் என்றெல்லாம் அழைக்கலாம். இது போல பல வார்த்தைகளுக்கு வரும் சொற்களுக்கான பல சொற்களை பதிவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நூல் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

நூல் என்றால் என்ன.?

புத்தகம் வேறு பெயர்கள்

நூல் (Book) என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது.

நூல் இரு பொருள்:

நூல் என்பதற்கு இரு பொருள்களை தருகிறது.

நூல் என்று சொல்லுக்கு இழை, யாப்பு என்ற அர்த்தங்கள் இருக்கிறது.

அதாவது நூல் என்பது கருத்துக்களை பதிவிடும் எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவியாக இருக்கிறது. அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

நூல் வேறு சொல்

  • வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய கருவாச்சி காவியம் நூலை படித்தாயா அவ்வளவு அருமையாக இருந்தது.
  • நூல் என்பது பல இழைகளை ஒன்றாகச் சுழற்றுவதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் இழை.

எடுத்துக்காட்டு:

  • பூ கட்டுவதற்கு பூ நூலை எடுத்துட்டு வா.
  • இந்த கலர் துணிக்கு இந்த நூல் நல்லா இருக்காது. இந்த கலரில் உள்ள நூலை வைத்து தைத்தால் தான் நன்றாக இருக்கும்.

நூல் வேறு சொல்:

  • பஞ்சு முதலியவற்றால் ஆன இழை
  • சரடு
  • புத்தகம், பனுவல்
  • ஆய்வேடு
  • அறிவியல்

நூல் வகைகள்:

  • இலக்கிய நூல்கள்
  • அறிவியல் நூல்கள்
  • சமூக அறிவியல் நூல்கள்
  1. இலக்கிய நூலில் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் போன்றவை அடங்கும்.
  2. அறிவியல் நூல்களில் பொது அறிவியல் , கணித அறிவியல், தொழில்நுட்ப நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவை உள்ளடக்கியதாக இருக்கும்.
  3. சமூக அறிவியல் நூலில் வரலாறு, தத்துவம், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்றவை உள்ளடக்கியதாக இருக்கும்.

நூல் in English:

நூல் என்று சொல்லுக்கு இரு பொருள்படும்.

  • Book
  • Thread

புத்தகம் வேறு பெயர்கள்:

  • நூல்
  • பனுவல்.
இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement