NRI Full Form Tamil Meaning
நாம் அனைவருமே NRI என்ற வார்த்தையை அதிகம் கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான விரிவாக்கம் மற்றும் அர்த்தம் என்னெவென்று நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளவும் விதமாக இப்பதிவில் NRI என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக, ஒரு பெரிய வார்த்தையை சுருக்கி சிறியதாக கூறுவதும் எழுதுவதும் வழக்கம். அதாவது, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு Full Form என்பது இருக்கும். அதேபோல், இந்த NRI என்ற எழுத்திற்கு பின்னால் இருக்கும் விரிவாக்கம் என்ன என்பதையும் அதன் அர்த்தம் என்ன என்பதையும் இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
NRI Full Form in Tamil:
NRI என்பதன் விரிவாக்கம் Non-Resident Indian ஆகும். இதனை தமிழில் வெளிநாடு வாழ் இந்தியர் என்று கூறலாம். NRI என்பது, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவில் பிறந்த ஒரு நபரைக் குறிக்க பயன்படுத்தும் சொல்லாகும்.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ஒரு NRI என்பது இந்தியாவில் பிறந்த குடிமகன் வேறு சில நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கு வாழ்பவர்கள் ஆகும். அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து சென்று பிற நாடுகளில் வாழும் இந்திய மக்கள் ஆவார்கள். இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டு ஒன்று வைத்திருப்பவர்கள். இதனை வைத்தே அவர்கள் இந்தியர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
Jacto Geo என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம்
NRI பற்றிய சில தகவல்கள்:
இதுவரை, உலகெங்கும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி நபர்கள் மக்கள்தொகை 30 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது பெரிய NRI -க்களை இந்தியா கொண்டுள்ளது.
NRI Account Meaning in Tamil:
NRI அக்கவுண்ட் என்பது, இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தில், பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர் (NRI ) அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தொடங்கும் வங்கிஅக்கவுண்ட்களை குறிக்கிறது.
NRI அக்கவுண்ட் வகைகள்:
- குடியுரிமை இல்லாத வெளி (NRE) கணக்குகள்
- குடியுரிமை பெறாத சாதாரண (NRO) கணக்குகள்
- வெளிநாட்டு நாணயம் குடியுரிமை இல்லாத (FCNR) கணக்குகள்
UPSC-யில் உள்ள வேலைகள் மற்றும் அதன் விரிவாக்கம் தெரியுமா.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |