ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) என்பதன் தமிழ் சொல் என்ன தெரியுமா..?

Advertisement

Online Shopping Tamil Name

என்ன தான் இவ்வுலகில் பல மொழிகள் பேசப்பட்டு வந்தாலும், தமிழ் மொழிக்கு இருக்கும் தனிச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது. பொதுவாக நாம் அனைவருமே என்ன தான் தமிழர்களாக இருந்தாலும், பேசும் பொழுது சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றோம். அதுபோல நாம் ஆங்கிலத்தில் சில சொற்கள் பேசி வந்தாலும், அந்த ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடுவோம். அப்படி நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை தான் ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping). ஆகவே இந்த பதிவின் வாயிலாக ஆன்லைன் ஷாப்பிங் தமிழ் சொல் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Quinoa என்பதன் தமிழ் பெயர் என்ன தெரியுமா

ஆன்லைன் ஷாப்பிங் தமிழ் சொல்:

ஆன்லைன் ஷாப்பிங் தமிழ் சொல்

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் நம் அனைவராலும் அதிகமாக பேசப்படும் வார்த்தை என்றால், அது ஆன்லைன் ஷாப்பிங் தான். பலரும் ஆன்லைனில் தான் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். ஆகவே ஆன்லைன் கடைகள் தினம் தினம் உருவாகி கொண்டே செல்கிறது.

இருந்த இடத்தில் இருந்தே தனக்கு தேவையான மற்றும் மனதிற்கு பிடித்த பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி கொள்ளலாம். இதை தான் ஆன்லைன் ஷாப்பிங் என்று சொல்கிறோம்.

ஆகவே ஆன்லைன் ஷாப்பிங் என்றால் என்ன என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் என்பதன் தமிழ் சொல் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், ஆன்லைன் ஷாப்பிங் தமிழ் சொல் என்ன என்று தற்போது காண்போம்.

வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன

Online Shopping Tamil Name:

ஆன்லைன் ஷாப்பிங் தமிழ் சொல்

ஆன்லைன் (Online) என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகழ்நிலை என்பது தான் தமிழ் அர்த்தமாகும்.

அதுவே ஷாப்பிங் (Shopping) என்பதற்கு கடையில் பொருட்கள் வாங்குதல் அதாவது வர்த்தகம் என்பது தான் தமிழ் சொல்லாகும்.

ஆகவே (Online Shopping) என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகழ்நிலை வணிகம் அல்லது இணைய வர்த்தகம் என்ற தமிழ் சொல்லால் அழைக்கலாம்.

மேலும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு பல தமிழ் பெயர்கள் இருக்கின்றன. அதை பற்றி தற்போது காண்போம்.

  1. இயங்கலை வணிகம்.
  2. இயங்கலை கடைவலம்.
  3. இயங்கலை சந்தை.
  4. இணைப்பியல் வணிகம்.
  5. இணைப்பியல் கடைவலம்.
  6. இணைப்பியல் சந்தை.
  7. இணைய வணிகம்.
  8. இணையக் கடைவலம்.
  9. இணையச் சந்தை.
  10. இணையவழி பொருள் வாங்குதல்
  11. இணைய வர்த்தகம்
  12. நிகழ்நிலை வணிகம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement