பகைமை வேறு சொல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கல்வி அறிவு மட்டும் நமக்கு இருந்தால் போதும் அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். அப்படி பார்த்தால் கல்வி அறிவு என்பது நமக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட இவற்றிற்கு அப்பால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பேசும் மற்றும் எழுதும் வார்த்தைகள் ஏராளமாக இருந்தாலும் கூட அதில் சில அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் நம்முடைய தமிழ் மொழியில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கின்றது. இந்த வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றது. இந்த அர்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தத்தை மட்டும் தான் அறிந்திருப்போம். அது போல ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. அதனை பற்றியும் அறிந்திருக்க மாட்டோம். நம்முடைய குழந்தைகளுக்கு வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் பகைமை என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
பகைமை என்றால் என்ன.?
பகைமை என்று சொன்னால் தெரியாது அதுவே விரோதம் என்று கூறினால் நமக்கு தெரியும். ஒருவர் வளர்ந்து வருகிறார் என்றால் அவர்களுடைய வளர்ச்சியை தடுப்பதற்கு என்று ஒரு விரோதம் வரும். இந்த வார்த்தையானது போர்க்காலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கிறது. நம் மேல் விரோதம் உள்ளவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை அழிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
மனிதனின் எண்ணங்களில் பகைமை இருத்தல் கூடாது. ஏனென்றால் பகைமை இருந்தால் அவரை அழிக்க வேண்டும் என்று என்ற எண்ணம் வரும். இந்த உணர்வானது நமக்கும் சரி, கூட இருப்பவர்களும் சரி தீங்கை ஏற்படுத்தும். அதனால் இந்த உணர்வினை வளர்த்து கொள்ளாதீர்கள்.
பகைமை வேறு பெயர்கள்:
- விரோதம்
- பகையுணர்வு
- வன்முறை
- சூழ்ச்சி
- பழி வாங்குதல்
பகைமை in English:
பகைமை என்பதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று கீழே உள்ளதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- Enmity
- hostility
- animosity
பகைமை எதிர்ச்சொல்:
- ஒற்றுமை
- அன்பு
- சகிப்புத்தன்மை
- நட்பு
மேல் கூறியுள்ளவை பகைமை என்பதற்கான எதிர்ச்சொல்லாக இருக்கிறது.
அற்புதம் வேறு சொல் |
கடினம் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |