பஞ்சமி நிலம் என்றால் என்ன
நாம் வாழும் இந்த உலகில் உள்ள தொழில்களிலேயே மிகவும் புனிதமான மற்றும் மிகவும் கஷ்டமான தொழில் தான் விவசாயம். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் உழவர்களை கடவுளாக மதித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் அவ்வளவு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றே கூறவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் நிலத்தை வாங்குவதற்கு யோசிக்கிறார்கள், மேலும் நிலத்தை பற்றிய புரிதலும் இல்லை. நிலம் என்றால் விவசாயம் செய்வோம், இல்லையென்றால் அதில் வெற்றி இடமாக மாற்றி விட்டு வீட்டை கட்டுவோம். இந்த பதிவில் பஞ்சமி நிலம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பஞ்சமி நிலம் என்றால் என்ன.?
நாம் வாழ்வதற்கு அடிப்படையாகவும், முக்கியமானதாகவும் இருப்பது நிலம் தான். இதில் ஒன்றான பஞ்சமி நிலம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் ஏழை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். நிலமின்றி வாழ்கின்ற ஏழை மக்களுக்கு (பட்டியலின மக்கள்) 1892 ம் ஆண்டு இந்திய பிரிட்டிஸ் அரசினால் வழங்கப்பட்டுள்ள நிலமாகும்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்களை பஞ்சமர்கள் என்று அழைத்தார்கள், அதனால் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தையும் பஞ்சமி நிலம் என்று அழைத்தார்கள்.
சரித்திரம் என்பதை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா..?
பஞ்சமி நிலத்தின் விதிமுறைகள்:
ஆங்கிலேயர்கள் பஞ்சமி நிலத்திற்கென்று தனியாக விதிமுறைகள் வகுத்துள்ளனர், அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட மக்கள் அனைவரும் அந்த நிலத்தில் விவசாயம் மற்றும் வீட்டை கட்டி கொள்ளலாம்.
நிலத்தை வாங்கிய முதல் 10 ஆண்டுகளுக்கு விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது.
இந்த நிலத்தினை 10 ஆண்டுகள் கழித்து விற்கலாம், ஆனால் அதனை பட்டியலின மக்களிடம் மட்டும் விற்க வேண்டும். ஏனென்றால் உயர்சாதி மக்களிடம் நிலத்தை விற்றால் அவர்கள் நிலத்தினை வாங்கி அடிமைப்படுத்தி விடுவார்கள் என்பதால் இந்த விதிமுறை வைத்தார்கள்.
பட்டையலினத்தை சேராத ஒருவர் பஞ்சமி நிலத்தை வாங்க நினைத்தால் அதனை அரசாங்கம் பதிவு செய்ய கூடாது, ஒருவேளை பதவி செய்துவிட்டால் எந்தவித இழப்பீடும் இன்றி அந்த நிலத்தின் சொந்தக்காரரிடம் கொடுப்பதற்கு அரசுக்கு முழு உரிமை இருக்கிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |