பறவை வேறு பெயர்கள் | Paravai Veru Peyargal in Tamil

Advertisement

Paravai Veru Peyargal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக பறவை என்பதன் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.

பொதுவாக நம் அனைவருக்குமே இருக்கும் ஆசைகளில் இதுவும் ஓன்று. அதாவது நாமும் பறவை மாதிரி பறக்க வேண்டும், நமக்கு இறக்கைகள் இருக்க வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருந்திருக்கும். இவ்வுலகில் பறவைகள் சுதந்திரமானவை. ஆனால் அவற்றையும் இப்போது கூண்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள். சரி வாங்க பிரண்ட்ஸ் பறவை என்பதன் வேறு பெயர்கள் என்ன என்று பார்ப்போம்.

நேரம் வேறு சொல்

பறவை என்றால் என்ன..?

பொதுவாக இறக்கைகள் கொண்ட ‘இருகாலி’ யை தான் பறவை என்று கூறுகிறார்கள். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கின்றன.

தெளிவாக சொல்லவேண்டும் என்றால், பறக்கும் தன்மை கொண்ட உயிரினங்களைப் பறவை என்று சொல்கிறோம்.

அதுபோல விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள் தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் ‘கெரோட்டின்’. இது நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின் ஆகும். ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும்.

பவித்திரம் வேறு சொல்

இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும்.

அதுபோல பறவைகளின் அரசன் “பாறு கழுகு” என்று சொல்லப்படுகிறது.

பறவை வேறு பெயர்கள்: 

பறவை என்பதை நாம் வேறு பெயர்களாலும் அழைக்கலாம். அவை என்னென்ன பெயர்கள் என்று தற்போது காண்போம்.

  • புள்
  • குரீஇ
  • பறவை
  • பறக்கை
  • இருகாலி
  • எருவை

தானிய குவியல் வேறு சொல்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement