Pavithram Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் பற்றிய தகவல்களை தினமும் ஒன்றாக அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் மூலம் பவித்திரம் என்றால் என்ன..?
பவித்திரம் என்பதன் வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். எனவே நம்மில் பலரும் பவித்திரம் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்று பலரும் தேடி இருப்பீர்கள். ஆகவே அதை இப்போது இந்த படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!
பவித்திரம் என்றால் என்ன..?
பொதுவாக பவித்திரம் என்பது மோதிரத்தை குறிக்கிறது. அதாவது பவித்திர மோதிரம் என்பது இந்தியர்கள் சில சடங்குகளின் பொழுது அணியும் ஒரு வகையான தங்க மோதிரம் ஆகும்.
இந்த புனித மோதிரம் ஆனது மூதாதையர்களுக்காகச் செய்யப்படும் பித்ரு பலி என்ற சடங்கின் போது அல்லது அந்த நபரின் இறந்த மூதாதையர்களுக்கான பிரார்த்தனையின் போது அணியப்படுகிறது.
அதுபோல இந்த பவித்திர மோதிரம் பாரம்பரியமாக தருப்பைப் புல்லால் செய்யப்படுவதாகும். இருந்தாலும், நவீன பவித்திர மோதிரம் தங்கத்தால் ஆனது. இந்த மோதிரத்தின் வடிவம் தனித்துவமான ஒரு முடிச்சு போல் தோற்றம் தருகிறது.
எனவே பவித்திரம் என்ற வார்த்தைக்கு புனிதம் என்பது தான் அர்த்தமாகும். ஆகவே புனித மோதிரத்தை தான் பவித்திர மோதிரம் என்று சொல்கிறார்கள்.
அதேபோல, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் என்னும் வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை பவித்திரம் என்றும் கூறுவார்கள்.
பவித்திரம் வேறு சொல்:
அதுபோல இந்த பவித்திரம் என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் பல இருக்கின்றன. அந்த சொற்கள் பற்றி தற்போது காணலாம் வாங்க..!
- தூய்மை
- புனிதம்
- பரிசுத்தம்
- சுத்தம்
- துப்புரவு
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |