பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இந்திய பெண்ணுரிமை சட்டங்கள்
பெண்ணுரிமை சட்டம் என்பது அனைத்து வயதிலுள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள சுதந்திரத்தையும், உரிமைகளையும் குறிக்கிறது. பெண்களுடைய உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் நிறைய சட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றது. பெண்களின் உரிமைகள் என்பது பாலியல் வன்முறையில் இருந்து விடுப்படுதல், வாக்குரிமை, பொது நிறுவனங்களில் வேலை செய்வது, சமமான ஊதியம், குழந்தைகள் பிறப்பு உரிமை, சொத்துரிமை, குடும்ப உரிமைகளில் பெண்ணுரிமை, கல்வி உரிமை ஆகிவற்றை உள்ளடக்கியது. ஆனால் சில பெண்களுக்கு என்னென்ன சட்டங்கள் இருக்கின்றது என்று கூட தெரிவதேயில்லை. இப்போ நம்ப பார்க்கப்போர சட்டங்கள் வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும் அல்ல. குடும்ப பெண்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இதில் உள்ள முக்கியமான சட்டங்கள் பற்றி எல்லா குடும்ப பெண்களும் தெரிந்துகொள்ளவது நல்லது. பெண்களின் சட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாலாம் வாங்க..
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447-யின் விளக்கம் |
தெரிந்துக் கொள்ள வேண்டிய சட்டங்கள்:
- 1817-பட்டப்படிப்பு படித்து, பரிச்சை எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.
- 1818-முதல் முதலில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
- 1928- பெண்கள் தேர்வில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லும் பொழுது, இந்த சட்டங்களுக்கு அனுமதி தந்தவர்கள் யார்? பெருபான்மை மக்களையும் குறிப்பாக பெண்களையும் அரசியலுக்கும் சட்டத்தின் பயன்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்களாக ஆக்கவே, இந்த சட்டங்கள் பயன்படுத்தபட்டன என்றும் சொல்லப்படுவதும் உண்டு. இதனால் தான் நமது அரசாங்கம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சம உரிமை மக்களுக்கு அளித்துள்ளது. இச்சட்டத்தில் ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி சட்டபூர்வமாகியுள்ளது. பெண் உழைத்தால் உயர்வு தான், ஆனால் உழைப்போடு தன்னுடைய உரிமைகளையும் பெண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்:
பொதுவாக பெண்களுக்கு திருமணத்தில் நகை போட்டு, சீர் செய்வதினால் சொத்துக்களில் பங்குதரவே மாட்டார்கள்.
- 1956 ஜூலை 4-ம் தேதி பெண்களுக்கும் ஆண்களை போலவே சொத்துக்களில் சம பங்கு அளிக்க வேண்டும் என்று தான் இந்து வாரிசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- 1956 பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொல்லப்பட்டது.
- 1929 இல் பெரியார் சொத்துக்களில் சம உரிமை என்று அறிவித்தார்.
- அதன் பிறகு 60 வருடங்கள் கழித்து 1989-யில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பெண்களுக்கு சொத்துக்களில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றினார் சொல்லப்பட்டது.
அதுமட்டும் அல்ல திருமணம் ஆன பெண்களுக்கு கணவர் முறையாக சொத்துக்களை கொடுக்கவில்லை என்றாலும் சொத்துக்களில் பங்கு கேட்பதற்கு முழு உரிமையும் உண்டு. கணவர் முறைகயாக விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்தால் சொத்துக்களில் முழு அதிகாரமும் முதல் மனைவிக்கு மட்டுமே உள்ளது.
இந்து திருமணச் சட்டம்:
திருமணம் எல்லாருக்குமே சிறப்பாக அமைவது கிடையாது. சிலருக்கு கசப்பாகவே அமைந்து விடுகிறது, சில பெண்கள் திருமணத்திற்க்கு பிறகு நடக்கும் கொடுமைகளை வெளில் சொல்லுவதே கிடையாது. தன்னுடைய விதி என்று நினைத்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள், அதே சமயம் சில பெண்கள் தற்கொலையும் செய்த்து கொள்கிறர்கள். ஆனால் சட்டம் அவர்களுக்கும் சில உரிமைகளை கொடுத்திருக்கிறது. அந்த சட்டங்கள் என்னெவென்றால் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் எல்லா உரிமைகளும் சட்ட பூர்வமாக பெண்களுக்கு இருக்கிறது. ஒரு வேலை கணவர் இறந்து விட்டாலோ, விவாகரத்து கொடுத்திருந்தாலோ பெண்கள் விருப்பம் இருக்கும் வரை புகுந்த வீட்டில் இருக்கலாம்.
- இந்து வாரிசு சட்டம் 1956 பிரிவு 14, (அல்லது) இந்து திருமண சட்டம் 1955 பிரிவு 27 படி பெண்கள் சீதனமாக கொண்டு வந்த பொருட்கள் மட்டும் நகைகளை சட்ட பூர்வமாகதிரும்பவும் எடுத்து செல்ல உரிமை இருக்கிறது.
- வீட்டு வன்முறை சட்டம், சட்டப்பிரிவு 19 A வின்படி அவர்களின் சட்டங்கள் மறுக்கப்படும் பொழுது பெண்களுக்காக நடவடிக்கைகளும் எடுக்கமுடியும்.
- இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13 படி கணவர்களின் ஒப்புதல்கள் தேவையில்லை.
- இந்து தண்டனை சட்டம் பிரிவு 125 படி ஒரு பெண் வாழ்வதற்கும் அவர்கள் குழந்தையை பாதுகாப்பத்தற்கும் கணவனிடம் பணமும் பெற முடியும்.
- சட்டம் 1961 பிரிவு 304B படி (அல்லது) இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498 A வின் படி வரதட்சணை கேட்டு புகுந்த வீட்டில் கொடுமை செய்தால் புகார் அளிக்க உரிமை இருக்கிறது.
விவாகரத்திற்கு பிறகு ஐந்து வயது உள்ள குழந்தையை எடுத்து வளர்க்கும் சட்டம் முழு உரிமையும் பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை துரோகம், உடல் அளவில் துன்புறுத்தப்படுவது என கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் விவாகரத்து வாங்குவதற்கும் முழு உரிமைகள் இருக்கு.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம்:
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சேவைபெறும் உரிமை சட்டத்தின் படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் தேவையான சட்ட உதவியை இலவசமாகவும் பெற்றுக்கொள்ளவும் உரிமை இருக்கு.
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 100 இன் படி பாலியல் ரீதியாக தாக்கும் பொழுது பெண்கள் தங்களை பாதுக்காத்து கொள்ளும் பொழுது அந்த ஆண் உயிரிழந்தாலோ அதை குற்றமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
- சட்டம் 1986 படி பெண்களின் உடல் பாகங்களை மனதளவில் புன்படும் படி வர்ணித்து பேசினால் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 498 படி வீட்டில் இருக்கும் பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாய் மொழியக்காவும், பொருளாதார ரீதியாகவும், பாலியல் வன்கொடுமை ரீதியாகவும் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு மூன்று வருடத்திற்கு அபராதத்துடன் தண்டனை கிடைக்கும்.
சேவைபெறும் உரிமை சட்டத்தின் படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் தேவையான சட்ட உதவியை இலவசமாகவும் பெற்றுக்கொள்ளவும் உரிமை இருக்கு.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |