பிளவு வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிளவு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக தமில் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கு அதனை குறிக்கும் வேறு சொற்கள் என்பது இருக்கும். இதுபோன்ற வேறுசொற்கள் அனைத்தும் தேர்வுகளில் கேட்கப்படும். அவை அனைத்தையும் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம்.
வேறு சொற்கள் என்பது ஒரு சொல்லினுடைய அர்த்தத்தை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். இதனை நாம் புத்தகத்திலும் பல்வேறு எழுத்து தேர்வுகளிலும் பார்த்து இருப்போம். அதுபோல சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற கேள்விகள் போட்டியாக வைக்கப்படும். இதனை ஒரு பொருள் தரும் பல சொற்கள் என்றும் கூறுவார்கள். சரி, இப்போது பிளவு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Pilavu Meaning in Tamil:
பிளவு என்பது ஒரு பொருள் சேதமடைந்து உடையும் நிலையை குறிக்கிறது. அதாவது விரிசல், கிழிதல், உடையல் / கீறல் நிலை பிளவு என்பதாகும். ஒரு மரத்தில் நடுவில் கோடு விழுந்து இருந்தால் அந்த நிலை பிளவு எனப்படுகிறது. பிளவு என்ற சொல் ஆனது இடத்திற்கேற்ப மாறுபடும். ஆனால், அவற்றின் பொருள் ஓன்று தான். சூழ்நிலைக்கு ஏற்ப அதனை மாற்றி கூறுவார்கள்.
ஒழுங்காக இருந்த ஒன்று சேதமடைந்து செல்லும் நிலையே பிளவு ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக பலவற்றை கூறலாம். அவை பின்வருமாறு:
எடுத்துக்காட்டு வாக்கியம்:
- குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டதால் அனைவரும் பிரிந்தனர்.
- ஒரு பெரிய மரத்தின் நடுவில் பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
- இரண்டு குடும்பத்திற்கு இடையில் பிளவு ஏற்பட்டது.
- அவரது காலில் பிளவு ஏற்பட்டுள்ளது.
- தலைமுடி நுனிப்பகுதியில் பிளவு பட்டது.
பிளவு என்பதன் வேறு சொல் | Pilavu Veru Sol:
- விரிதல்
- கிழிதல்
- பிரிவு
- உடைப்பு
- கிளைப்பு
- சரிவு
- சிதைவு
- கிளைவிதை
- விரிந்துண்டாஞ்சந்து
- துண்டு வெட்டுப்பாக்கு
- அரைக்குன்றிமணிஎடை
- பிரிந்திசைப்பு
- வெடியுப்பு
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் பிளவு என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும், பிளவு என்பதை உடைப்பு அல்லது சிதைவு என்று கூறுவார்கள்.
Pilavu in English:
பிளவு என்பதை ஆங்கிலத்தில் Split, Cleavage என்று கூறுவார்கள்.
Anna Pilavu Meaning in Tamil:
ஒரு சில இடங்களில் அன்னப்பிளவு என்ற வார்த்தையினை கேட்டு இருப்போம். அன்னப்பிளவு என்பது, குழந்தையின் வாயின் மேற்பகுதியில் ஏற்படும் பிளவு அல்லது திறப்பு ஆகும். அதாவது, வாயின் மேற்பகுதியில் இரண்டாக பிரிந்து இருப்பது போல் இருக்கும். இது கர்ப்ப காலத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் ஏற்படும். இதனை வாய்வழி குறைபாடு என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |