Pirasithi Petra Veru Sol in Tamil
தமிழ் மொழியில் நமக்கு தெரியாத பல வார்த்தைகள் உள்ளது. அப்படி நமக்கு தெரியாத வார்த்தைகளில் ஒன்றுதான் “பிரசித்தி பெற்ற” என்ற சொல் ஆகும். அதாவது, இந்த “பிரசித்தி பெற்ற” என்ற வார்த்தையை நாம் அதிக இடங்களில் பிற கூற கேட்டு இருப்போம். ஆனால், “பிரசித்தி பெற்ற” என்பதற்கான அர்த்தம் நம்மில் பல பேருக்கு தெரியாது. ஆகவே, இதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில், அதற்கான விவரங்களை பதிவிட்டுள்ளோம்.
உதாரணமாக, இந்த கோவில் அந்தகாலத்தில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்று கூறுவார்கள். இது போன்ற பல இடங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். ஆகையால், பிரசித்தி பெற்ற என்றால் என்ன.? இதற்கு இணையாக வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பிரசித்தி பெற்ற என்றால் என்ன.?
ஒரு நிகழ்வை அல்லது ஏதோவொன்றின் சிறப்பினை எடுத்துக் கூறுவதே பிரசித்தி பெற்ற என்ற சொல்லாகும். அதாவது, தஞ்சை பெரியகோவில் என்பது உலகளவில் அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டு பிரபலம் அடைந்து சிறப்புடையதாக இருக்கிறது. ஆகையால், இதனை பிரசித்தி பெற்ற கோவில் என்று கூறுவார்கள். அதாவது, பல காலங்களாக புகழ்பெற்று இருக்கும் அனைத்தையும் “பிரசித்தி பெற்ற” என்ற வார்த்தையை பயன்படுத்தி கூறலாம்.
பிரசித்தி பெற்ற வேறு சொல்:
- புகழ் பெற்ற
- பிரபலம் அடைந்த
- சிறப்பு பெற்ற
- பெருமை அடைந்த
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள்:
- திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் (மலைக்கோட்டை)
- தஞ்சை பெரிய கோவில்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
பிரசித்தி பெற்ற in English:
- Spread
- Publicity
- Campaign
- Famous
RELATED POST |
பாக்கி என்ற வார்த்தையின் வேறு சொல் என்ன தெரியுமா |
பிரமிப்பு வேறு சொல் |
தீவிரம் வேறு சொல். |
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |