பிராது வேறு சொல்..! | Praadhu Veru Sol In Tamil..!
வணக்கம் வாசிப்பாளர்களே..! இன்றைய பதிவில் பிராது என்பதன் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். அன்றைய கால கட்டத்தில் பிராது சொல்லை பெரிதும் பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்போதைய கால கட்டத்தில் பிராது சொல் யாருக்கும் தெரிவதுமில்லை யாரும் பயன்படுத்துவதும் இல்லை. பிராது சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
நாம் கிராம பஞ்சாயத்துகளில் அல்லது திரைப்படங்களில் இந்த பிராது என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்போம். நம் வீட்டிலேயே நம் தாத்தா அல்லது பாட்டி இந்த பிராது வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள். பிராது என்ற சொல்லை இன்றைய காலத்து குழந்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றே தெரிவதில்லை. அதற்கான அர்த்தத்தையும் வேறு சொல்லையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
மேன்மை என்பதன் வேறு சொல் என்ன.?
பிராது என்றால் என்ன?
பிராது என்றால் உதாரணத்திற்கு ஒரு நபர் மற்றொரு நபரை பணம் கொடுக்கும் விஷயத்தில் ஏமாற்றிவிட்டால். ஏமாந்த நபர் அவர் மீது பிராது குடுக்கலாம். அதாவது அந்த நபரின் மீது குற்றம் சுமத்துவார். பிராது என்ற வார்த்தையை பெருமளவில் கிராம பஞ்சாயத்துகளில் பயன்படுத்தி வந்தனர். தற்போது பிராது வார்த்தையை புகார், நீதி என்று பயன்படுத்துகிறோம்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒருவரிடம் பணத்தையோ அல்லது பொருளையோ கடனாக குடுக்கிறீர்கள் அவர்கள் உங்களிடம் பணம் அள்ளாது பொருள் வாங்கி கொண்டு உபயோகித்து விட்டு நீங்கள் அதை திருப்பி கேட்கும் பொழுது அவர்கள் உங்களுக்கு பணம் அலல்து பொருளை திரும்பி தராமல் உங்களை ஏமாற்றினால், நீங்கள் அவர்கள் மீது பிராது(புகார்) அளிக்கலாம்.
பிராது வேறு சொல்:
- நீதி மன்றத்தில் முறையீட்டு விண்ணப்பம் கொடுத்தால்.
- முறையீட்டு விண்ணப்பம்
- முறையீடு
- புகார்
- நியாயம் கேட்கும் முறை
- குற்றம் சுமத்துதல்
- மனு கோரிக்கை
பிராது In English:
- Suit
- Petition
- Complaint
வாக்கியம்:
- எங்கள் மனுவில் கையெழுத்திட விரும்புகிறீர்களா?
- எங்கள் மனுவை விசாரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- அவள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தாள்.
- இந்தப் பிரச்சினையை விசாரிக்குமாறு அந்த அமைப்பு அரசுக்கு மனு அளித்தது.
- சேர்க்கை கொள்கையை மறுபரிசீலனை செய்ய பெற்றோர்கள் பள்ளிக்கு மனு அளித்தனர்.
- நான் என்னிடம் பணம் கொடுக்காமல் ஏமாற்றியவரின் மேல் புகார் அளித்துளேன்.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |