போன் வந்தால் ஏன் Hello என்று சொல்கிறோம்.?
வணக்கம் நண்பர்களே..! அனைவருமே போன் பேசுவோம். போனில் கால் வந்து அட்டேன் பண்ணியதும் ஹலோ என்று சொல்கிறோம். அது ஏன் என்று சொல்கிறோம் என்று யோசித்திருக்கிறீர்களா.? அப்படி யோசித்திருக்கிறார்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பதிலாக இருக்கும். நாம் பேச ஆரம்பிக்கும் போதும் சரி, எதாவது tower problem இருக்கும் போதும், அவர்கள் பேசாத போதும் ஹெலோ என்ற வார்த்தையை தான் அதிகமாக சொல்கிறோம். அப்படி என்ன இந்த ஹலோவில் இருக்கும் வாங்க படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா..?
ஹலோ ஏன்.?
போன் இல்லாமல் யாரும் இல்லை. யாரும் பாதையை பார்த்து நடப்பதில்லை. போனை பார்த்து தான் நடக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகம் பயன்படுத்துன்றனர்.
காலையில் எழுந்ததும் பல் கூட துலக்கமாட்டோம். ஆனால் 3 போனை திறந்துவிடுவார்கள். காலையில் எழுந்ததும் போன் முகத்தில் கண் விழிப்பவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
அதிகம் போன் பேசும் போது பயன்படுத்த கூடிய வார்த்தை ஹலோ. இதை ஏன் சொல்கிறோம். இதில் சும்மா ஒரு கதை கூட சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா.?
போனை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். இவருடைய காதலியின் பெயர் ஹலோ. இவரது காதலிக்கு போன் செய்ததும் ஹலோ என்று கூப்பிட்டாராம். இப்போ உங்களுக்கு தோன்ற வேண்டும் அவரின் காதலி வீட்டில் மட்டும் போன் இருந்ததா? என்று யோசிக்க வேண்டும். இந்த கதை சும்மா சொல்லபட்டது.
ஹலோ என்று சொல்வதன் உண்மையான காரணத்தை தெரிந்துகொள்வோம். ஹலோ என்பது உங்களை வரவேற்பது. ஹலோ என்ற வார்த்தையை 1830 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைக்கு வந்தது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் போன் பேச ஆரம்பித்ததும் ஆஹாய் என்ற வார்த்தையை தான் சொன்னார். அனைவருமே ஆஹாய் என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் ஹலோ என்ற வார்த்தையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
அதன் பிறகு தான் ஹலோ ஹலோ என்று சொல்லி வருகிறோம். இப்போது ஹலோ ஏன் சொல்கிறோம் என்று தெரிந்துகொண்டீர்களா.! இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்கும். வேறொரு பதிவில் முகம் தெரியாமல் படிக்கும் நண்பர்களை சந்திக்கிறேன்..! நன்றி வணக்கம்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |