Resume இந்த மாதிரி இருந்தால் எப்படி வேலை கிடைக்கும்..

resume mistakes to avoid in tamil

Resume Avoid This Content

படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்கள் ஒரு நிறுவனத்திற்கு வேலை கேட்டு செல்லும் போது Resume ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. இதை வைத்து தான் உங்களுக்கு வேலை கொடுக்கலாமா என்றே முடிவு செய்து விடுவார்கள். Resume-யில் என்னென்ன இருக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் அதிலேயே உங்களை அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறீர்கள். அது என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Resume மில் என்னென்ன விவரங்கள் இருக்கவேண்டும் தெரியுமா..!

Top Resume Mistakes to Avoid:

Resume முழுவதும் ஒரே மொழியை கொண்டு உருவாக்கவும். ஸ்டைல்க்காக வெவ்வேறு வார்த்தைகளில் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து நீங்கள் எந்த துறை சார்ந்ததாக வேலை தேடுகிறீர்களா அதை பற்றி நீங்கள் ஏதும் படித்திருந்தால் அல்லது தெரிந்திருந்தால் அதை சேர்க்க வேண்டும்.

 எடுத்துக்காட்டிற்கு நீங்கள் Resume-யில் Leadership ஆக இருந்தேன் என்று கொடுத்துருப்பீர்கள். அதற்கு பதிலாக என்ன project-கிற்கு leader இருந்தீர்கள் அதனால் சாதித்தது என்ன என்று குறிப்பிட வேண்டும்.   

கம்பெனி இன்டர்வியூவில் உங்களை பற்றி சொல்வது எப்படி?

உங்களை பற்றி நீங்களே புகழ்ந்து சொல்ல வேண்டாம். அதாவது நான் ஒரு பிரச்சனையை சமாளித்துவிடுவேன். முடிவுகள் சரியாக எடுப்பேன், சுறுசுறுப்பாக இருப்பேன் என்றெல்லாம் கூற வேண்டாம். எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Go-getter
  2. Go-to person
  3. Strategic thinker
  4. Best of breed
  5. Think outside the box
  6. Results-driven
  7. Detail-oriented
  8. Proactive

நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சில வார்த்தைகளில் பதிவிடுவீர்கள். அதாவது கடினமாக உழைப்பேன் என்றெல்லாம் பதிவிடுவீர்கள். அதெல்லாம் தவிர்த்து போடவும். கீழே சில எடுத்துக்காட்டுகள்..

  1. Hard worker
  2. People-person
  3. Self-motivated
  4. Team player

உங்களிடம்  இல்லாத திறமையை Resume-யில் பதிவிட வேண்டாம். 

விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டியவை:

நீங்கள் வேலை அனுபவம் இருந்திருந்தால் அதில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் அதில் சாதித்தது என்ன என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். கீழ் கொடுக்கப்பட்டவைகளில் ஏதவாது ஒன்றை சாதித்தீர்கள் என்றால் விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும்.

  1. Achieved
  2. Created
  3. Developed
  4. Established
  5. Ideas
  6. Improved
  7. Increased/decreased
  8. Influenced
  9. Launched
  10. Managed
  11. Negotiated
  12. Resolved
  13. Revenue/profits
  14. Trained/mentored
  15. Under budget
  16. Volunteered

இன்டர்வியூவில் வெற்றி பெற இந்த டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினால் போதும்..!

இது போன்ற Learn பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  Learn