Resume Rormat For Job in Tamil
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு முக்கியமானதாக இருப்பது Resume தான். ஏனென்றால் அதனை வைத்தும் தான் உங்களை வேலைக்கு எடுக்கலாமா என்று தேர்வு செய்வார்கள். சிலருக்கு சில கேள்விகள் இருக்கும். நாம் படித்ததை இதில் பதிவிடலாமா, இல்லை வேண்டாமா என்று தோன்றும்.
அதிலும் சிலர் Computer பற்றி படித்திருப்பார் ஆனால் அதனை இதில் குறிப்பிடுவதா என்று நினைத்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். அதனால் கூட சில நேரங்களில் வேலை கிடைக்காமல் போகும். இன்னும் பல கேள்விகள் Resume மில் என்ன பதிவு செய்வது என்று வாங்க அதனை பற்றி தெளிவாக பார்ப்போம்..!
Resume Format For Job in Tamil:
முதல் பக்கத்தில் உங்களுடைய பெயர் இமெயில் ஐடி, செல்போன் நம்பர் ஆகியவை மட்டும் இருக்க வேண்டும். அதுவே போதுமானது. இதனை வைத்து உங்களை அவர்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.
முக்கியமாக உங்கள் E MAIL ID வித்தியாசமாக இல்லாமல் வேலைக்கு ஏற்றது போல் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.
அதேபோல் உங்களது Pass Port Size அதாவது 2 x 2 inches புகைப்படம் வலது புறம் அல்லது இடது புறத்தில் இருக்க வேண்டும். புகை படம் செலஃபீ எடுத்தது போல் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் புகை படத்தை பார்த்த உடனே உங்களை வேலைக்கு எடுக்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.
அடுத்ததாக Objective என்று குறிப்பிட வேண்டும். இந்த இடத்தில் வேலைக்கு சேர்வதற்கான காரணங்கள் அதுவும் 2 அல்லது 3 வரிகளில் இருக்க வேண்டும்.
தகுதி: இந்த இடத்தில் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்பதையும் அதில் எவ்வளவு மதிப்பெண்கள், மற்ற துறைகளில் என்ன படித்துள்ளீர்கள் என்றும் குறிப்பிடலாம்.
இதையும் தெரிந்துகொள்ளவும்👉👉 இன்டர்வியூவில் வெற்றி பெற இந்த டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினால் போதும்..!
இப்போது அதிகமாக வலைத்தளங்களில் மக்கள் இருப்பதால் உங்களுடைய ஐடி இருந்தால் அதில் அதுவும் துறைசார்ந்து எதாவது இருந்தால் மட்டுமே அதில் குறிப்பிடலாம்.
கடைசியாக உங்களுடைய தனி திறமையை குறிப்பிடலாம். அதாவது நடனம், பாடல், நடிப்பு, விளையாட்டு என மற்றவர்களை காட்டிலும் நான் இதில் சிறந்தது என்றும் சொல்லாம் உத்தரமாக நான் கணிதத்தில் சிறந்து விலகுவேன் என்றும் கூட குறிப்பிடலாம். இவ்வளவு பதிவு செய்தால் பெரிதாக Resume இருக்கும் என்று நினைப்பீர்கள் அதில் ஒரு தவறும் இல்லை 3 பக்கம் கூட இருக்கலாம்.
இதற்கு முன் வேலை பார்த்திருந்தால் முன் அனுபவம் என்ற இடத்தில் இதற்கு முன் வேலை பார்த்த இடத்தின் பெயர், அங்கு என்னவாக வேலை பார்த்தீர்கள், எவ்வளவு வருடம் பணிபுரிந்தீர்கள் என்றும் பதிவு செய்யலாம்.
விருப்பம் இருந்தால் அந்த வேலையை விட்டு நின்ற காரணத்தையும் பதிவு செய்யலாம்.
கம்பெனி இன்டர்வியூவில் உங்களை பற்றி சொல்வது எப்படி?
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |