Salary Calculating Formula in Tamil | Take Home Salary Calculator
நாம் பார்க்கும் வேளைக்கு கிடைக்கும் ஊதியமே சம்பளம் ஆகும். சம்பளத்தை தினமும் வாங்குபவர்களும் உண்டு, அவர்கள் தினக்கூலிகளாவர், அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் வாங்குபவர்களும் உண்டு. அப்படி மத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஆஃபர் லெட்டரிலும், பேஸ்லிப்பிலும் சம்பளத்தை பற்றி தெளிவாக கொடுத்திருக்கும். Salary Slip-ல் தான் மிகவும் தெளிவாக நமக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றியும் கொடுத்திருப்பார்கள். நீங்கள் Salary Calculating Formula பற்றிய தகவல்களை தேடி கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும்.
நாங்கள் இங்கே நீங்கள் வாங்கும் சம்பளத்தை எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி தெளிவாக கூறியுள்ளோம்.
Monthly Salary Calculation Formula
நீங்கள் Monthly salary calculation formula போவதற்கு முன் சம்பளத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
- CTC (Cost to Company): நிறுவனம் உங்களுக்காக செலுத்திய அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கிய முழுமையான சம்பளத் தொகுப்பாகும்.
- Gross Salary: உங்களின் அடிப்படை ஊதியம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), வருங்கால வைப்பு நிதி, விடுப்பு பயணக் கொடுப்பனவு (LTA), மருத்துவப் பலன்கள், தொழில்முறை வரிகள் மற்றும் பிற விலக்குகள் அனைத்தும் உங்கள் மொத்த ஊதியத்தில் சேர்க்கப்படுவதை Gross Salary என்பார்கள்.
- Gratuity: இதனை தமிழில் பணிக்கொடை என்று சொல்வார்கள், இந்த பணிக்கொடையானது உங்கள் சேவைகளுக்கு ஈடாக வழங்கப்படும் பானமாகும். இதற்கு குறைந்தது நீங்கள் 5 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.
Basic Salary Calculation Formula
ஒவ்வொரு விதமான சம்பளத்தையும் எப்படி கணக்கிடுவது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.
Gross Salary Formula:
மொத்த சம்பளம் (Gross Salary): CTC – EPF – Gratuity
Gratuity Salary Formula:
Gratuity (பணிக்கொடை): (Basic salary + DA) × 15/26 ×பணியாற்றிய வருடங்களின் எண்ணிக்கை.
Taxable Income Formula:
Gross Salary – EPF/PPF Contribution – Tax-free Allowance – HRA – LTA – Health Insurance – Tax-saving Investments – பிற விலக்குகள்.
Take Home Salary Calculator
Gross Salary – Income Tax – EPF Contribution – Professional Tax
இது போல Salary Calculating Formulas பயன்படுத்தி நீங்கள் உங்களது சம்பளத்தை கணக்கிடலாம்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |