சிங்கம் வேறு பெயர்கள்.!

Advertisement

சிங்கம் வேறு பெயர்கள் | Singam Veru Peyargal

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிங்கத்தின் வேறு பெயர்கள்/வேறு சொற்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். சிங்கம் காட்டின் ராஜா என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், சிங்கத்திற்கு வழங்கப்படும் பெயர்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

சிங்கம் ஒரு பாலூட்டி வகையை சாந்த காட்டு விலங்கு ஆகும். சிங்கம் ஆனது, அடர்ந்த காடுகளை விரும்பாமல், அடர்த்தி குறைவாக இருக்கும் இடங்களிலே வாழ விரும்பும். இது கர்ஜித்தால் சுமார் 8 கிலோ மீட்டர் வரை கேட்கும். சிங்கம் நல்ல கேட்கும் திறன் கொண்டது. சிங்கம் ஆனது, பெரும்பாலும் மான், காட்டெருமை, வரிக்குதிரை, பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும். இப்படி சிங்கத்தின் வாழ்க்கை முறை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஓகே வாருங்கள், சிங்கத்தின் வேறு பெயர்கள் என்ன.? அதன் தமிழ் பெயர்கள் என்ன.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

சிங்கம் வேறு பெயர்:

சிங்கம் வேறு பெயர்கள்

  • அஞ்சானனம்
  • அரசர் சின்னம்
  • அரிமா
  • அறுகு
  • ஆளி
  • ஐவாய்விலங்கு
  • ஐயானனம்
  • கடுமான்
  • காட்டரசன்
  • கண்டீரவம்
  • கராளி
  • கொடும்புலி
  • கோண்மா
  • கோவிலங்கு
  • கோளரி
  • சிம்மம்
  • சீயம்
  • தீத்தபிங்கலம்
  • தெரிமா
  • நகாய்தம்
  • பாரி
  • பூட்கை
  • பொங்கடி
  • மடங்கல்
  • மறப்புலி
  • மாபுலி
  • முன்னம்
  • வட்புலி
  • வயப்புலி
  • வயப்போத்து
  • வயமா
  • வன்மான்
  • வாளரி
  • விலங்கரசு
  • விலங்கரசன்
  • விலங்கேந்திரன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும், சிங்கம் என்பதற்கான  வேறு பெயர்கள்/வேறு சொற்கள் ஆகும்.  பிடரி மயிரைக் குறிக்கும் சொல்லான சிகை என்ற வார்த்தையில் இருந்து தோன்றிய பெயர்களே சிங்கம், சிகைமா, சிகையம், சீயம் போன்ற பெயர்கள் ஆகும்.

சிங்கம் பற்றிய கவிதைகள்..!

சிங்கம் தமிழ் பெயர்கள்:

  • அரிமா
  • வயமா
  • மடங்கல்
  • சிகைமா
  • சிகையம்
  • சீயம்

சிங்கம் என்பதை தமிழில் இவ்வாறு தன அழைப்பார்கள். இதில் மா என்பது மிருகங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும்.

ஆண் சிங்கம் வேறு பெயர்கள்:

  • முடங்குளை/ உளை – பிடரிமயிர்
  • ஆளரி
  • ஏறு
  • தெரிமா

பெண் சிங்கம் வேறு பெயர்கள்:

  • பெட்டை
  • கோவிலங்கு
  • ஆளி

சிங்கத்தின் குட்டி பெயர்:

சிங்கத்தின் குட்டியை குருளை என்று அழைப்பார்கள்.

சிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement