SSC தேர்வுகள் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

Advertisement

SSC தேர்வுகள் என்றால் என்ன? | SSC Meaning in Tamil |SSC Full Form

நண்பர்களுக்கு வணக்கம்.. SSC தேர்வு பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். SSC அப்படின்னா என்ன என்றால் Staff Selection Commission ஆகும்.  நமது தமிழ் நாட்டில் எப்படி TNPSC என்று தேர்வாணையம் பல வகையான தேர்வுகளை நடந்துகின்றனரோ. அது போன்று மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் தேர்வு தான் இந்த SSC தேர்வு ஆகும். மத்திய அரசில் நடைபெறக்கூடிய Union Public Service Commission (UPSC) தேர்வுகளான IAS, IPS தேர்வுகளுக்கு அடுத்தபடியாக இந்த அதிக பேமஸான தேர்வு எதுவென்றால் இந்த SSC தேர்வை சொல்லலாம். சரி இந்த SSC தேர்வு குறித்த சில தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

SSC ஆணையம்|Staff Selection Commission Tamil Meaning:

இந்த SSC ஆணையம் பல்லாயிரம் கணக்கான வேலைவாய்ப்புகளை நிவர்த்தி செய்கின்றன. மத்திய அரசு தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் இந்த SSC தேர்வு பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த SSC தேர்வாணையம் பலவகையான தேர்வுகளை அறிவிக்கின்றன. அதாவது பொறியியல் படித்தவர்களுக்கு தனியாக தேர்வு, டிகிரி படித்தவர்களுக்கு தனியாக தேர்வு, 12th படித்தவர்களுக்கு தனியாக தேர்வு, 10th படித்தவர்களுக்கு தனியாக தேர்வு என்று பலவகையான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

அவற்றில் அதிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் மூன்று தேர்வுகள் என்றால் அது CGL (Combined Graduate Level), CHSL (Combined Higher Secondary Level), MTS (Multi-Tasking Staff) ஆகிய தேர்வுகள் ஆகும்.

CGL தேர்வுக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதாவது பட்டம் படித்திருக்க வேண்டும்.

CHSL தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் 12th படித்திருக்க வேண்டும்.

MTS தேர்வுக்கு முயற்சி செய்பவர்கள் 10th படித்திருக்க வேண்டும்.

இந்த SSC தேர்வுக்கு வயது வரம்பு என்பது அதிகபட்சம் 27 வயதிற்குள் தான் இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினரான OBC-க்கு மூன்று ஆண்டுகளும், SC/ST- 5 ஆண்டுகளும், மாற்றுதியனாளிகளுக்கு 10 ஆண்டு வயது தளர்வு வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
CSR என்றால் என்ன தெரியுமா..?

தேர்வு முறை எப்படி இருக்கும் | SSC Exam Details in Tamil:

CGL தேர்வுக்கு:

Tier – 1, Tier – 2, Tier – 3 என்று மூன்று தேர்வுகள் அறிவிக்கப்படுகிறது.

Tier 1 மற்றும் 2 -யில் 100%-க்கு CBT தேர்வு நடத்தப்படுகிறது, Tier 3-யில் எழுத்து தேர்வு நடத்தப்படும், இது தவிர CPT மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு நடத்தப்படும்.

SSC CHSL தேர்வுக்கு:

Tier 1-யில் CBT தேர்வும், Tier 2-யில் எழுத்து தேர்வும் நடைபெறும். இதனை தொடர்ந்து CPT மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு நடைபெறும்.

MTS தேர்வுக்கு:

இந்த MTS தேர்வுக்கு Tier 1-யில் CBT தேர்வும், Tier 2-யில் எழுத்து தேர்வும் நடைபெறும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
PWD Full Form in Tamil – PWD என்பதன் தமிழ் விரிவாக்கம்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement