Sustainable Development Goals in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே குறிக்கோள் இருக்கும். அதாவது பள்ளியில் படிக்கும் மாணவர்களை கேட்டால் நான் மருத்துவராக ஆக வேண்டும், போலிஷ் ஆக வேண்டும் என்று சொல்வார்கள். அதுவே கொஞ்சம் வளர்ந்து வேலைக்கு செல்கிறவர்களிடம் கேட்டால் வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு குறிக்கோளை அடைந்து விட்டால் அடுத்த குறிக்கோள் வந்து விடுகிறது. அது போல பிரசிடண்ட், mla, அமைச்சர் போன்றவர்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும், அதவாது அந்த நாட்டில் என்ன முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
நிலையான வளர்ச்சி என்றால் என்ன.?
நிலையான வளர்ச்சி என்பது எதிர்கால சந்ததியினர் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை சமரசம் செய்யாமல், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சியாகும்.”
நிலையான வளர்ச்சியின் கருத்து பல வழிகளில் விளக்கப்படலாம், ஆனால் அதன் மையமானது ஒரு சமூகமாக நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார வரம்புகள் பற்றிய விழிப்புணர்வுக்கு எதிராக பல்வேறு மற்றும் பெரும்பாலும் போட்டியிடும் தேவைகளை சமநிலைப்படுத்தும் வளர்ச்சிக்கான அணுகுமுறையாகும்.
2016 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டு காலத்திற்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
17 குறிக்கோள்கள்:
வறுமை நிலையை ஒழிக்க வேண்டும்.
பசியின்மை சரி செய்தல், சத்தான உணவு கிடைக்க செய்தல், விவசாயத்தை வளர்ச்சி செய்தல்.
அனைத்து வயதானவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
பாலின பாகுபாடுமின்மையை உருவாக்குதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல்
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை கிடைக்க செய்தல்
எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நகரங்களையும், மனிதன் வாழும் இடங்கள் அனைத்தையும் மேம்படுத்துதல்.
புதுமையான விஷயங்களை கன்டுபிடிக்க வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும்.
நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமத்துவமின்மையை ஒழித்தல்
உற்பத்திகளை அதிகப்படுத்துதல்
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்.
பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் காக்க வேண்டும்.
சுற்றுசூழலை காக்க வேண்டும்,
சமூகத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும், எல்லா தரப்பினருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
நிலையான வளர்ச்சிக்கு உலகளாவிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்.
மனித உடலில் பிறந்தது முதல் இறக்கும் வரை வளராத உறுப்பு எது தெரியுமா ..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Learn |