Thamatham Veru Sol in Tamil
இன்றைய பதிவில் தாமதம் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்பதை பற்றி பார்க்க போகிறோம். தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் என்பது இருக்கும். இதனை பள்ளி பருவத்தில் கற்று இருப்போம். ஆனால், இப்போது பல சொற்களுக்கான வேறு சொல் பற்றி நமக்கு தெரிவதில்லை. தாமதம் என்ற சொல் அனைவருக்கும் தாமதம் என்ற சொல்லாக கருதப்படுகிறது.
பொதுவாக நம் அனைவருக்குமே தாமதம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தாமதம் என்பதனை பல வார்த்தைகளால் அழைக்கலாம். தாமதம் என்பது காலதாமதம் அல்லது தாமதித்தல் போன்றவற்றை குறிக்கிறது. இது ஒரு செயல் அல்லது நிகழ்வுகள் உரிய நேரத்தில் நடக்காமல், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நடப்பதை குறிக்கிறது. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகிறோம். ஆகையால், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு சொற்களில், இப்போது Thamatham Veru Sol in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க….
தாமதம் வேறு சொல் :
- காலக்கழிவு
- மந்தம்
- தள்ளி வைத்தல்
- ஒத்தி வைத்தல்
- நேரம் தாழ்த்துதல்
- கால நீட்சி
- கால நீட்டம்
- மெத்தனம்
- இழுத்தல்
- நேரம் வீணாக்குதல்
தாமதம் in english :
தாமதம் என்பதை ஆங்கிலத்தில் delay,procrastination,dilatoriness,tardiness, slowness,dullness மற்றும் inactivity என்று கூறுவார்கள்
வெளிப்படை வேறு சொல் | Velippadai Veru Sol in Tamil
தாமதம் என்றால் என்ன ?
தாமதம் என்பது ஒரு நிகழ்வின் தொடக்கத்திற்கும் அதை ஒரு பார்வையாளர் உணர்தலுக்கும் இடையிலான நேர தாமதம் ஆகும். நெட்வொர்க் மற்றும் தொலைதொடர்புகளில் ஒரு அனுப்புனர் ஒரு அமைப்பின் நிலையில் உள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அதை ஒரு பார்வையாளர் பார்ப்பதற்கும் இடையிலான நேரமாகும். நெட்வொர்க் தாமதம் பெரும்பாலும் முறைசாரா முறையில் தாமதத்துடன் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது. அதாவது தாமதம் என்பது குறிப்பிட்ட செயலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வதாகும். ஒரு விஷயத்தை குறித்த நேரத்தில் குறித்த சமயத்தில் முடித்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். தாமதமாக செயல்பட்டால் அதற்கேற்ற பலன் கிடைக்காது.
எடுத்துக்காட்டு :
- பரீட்சைக்கு காலதாமதமின்றி படித்துக்கொள்
- இனிமேலும் கால தாமதம் செய்யாமல் தேர்வுக்கு படிக்க ஆரம்பி.
- இரு நிமிடம் கூட இதில் தாமதம் செய்ய கூடாது.
- என்ன இவ்வளவு தாமதம்? ஏன் நேற்று வீட்டுக்கு வரவில்லை?
- தாமதம் செய்யாதே.
- ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்.
- வேலையை தமதமாக செய்யாதீர்கள்.
- மருத்துவமனைக்கு செல்ல தாமதம் ஆகி விட்டது.
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














