தைரியம் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

தைரியம் வேறு சொல் | Thairiyam Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், தைரியம் என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்களை/வேறு பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் பல விதமான குணங்கள் இருக்கும். அச்சம், வெக்கம், கோபம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் அதிகமாக இருக்கும். அவற்றில் ஒன்று தான் தைரியம். தைரியம் ஒரு சிலருக்கு அதிகமாகவும் ஒரு சிலருக்கு குறைவாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, சிலர் கரப்பான் பூச்சியை பார்த்தாலே அலறி ஓடி விடுவார்கள், சிலர் பாம்பை கூட கையில் பிடிப்பார்கள். இப்படி தைரியம் ஒரு சிலருக்கு குறைவாகவும் ஒரு சிலருக்கு அதிகமாகவும் இருக்கிறது. இன்னும் சிலருக்கு கொஞ்சம் கூட தைரியம் இல்லை. எனவே, தைரியம் என்றால் என்ன.? தைரியம் என்பதன் வேறு பெயர்கள்/வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

தைரியம் என்றால் என்ன.? 

தைரியம் என்பது எதையும் துணிச்சலாக செய்யும் செய்யும் திறன் ஆகும். மேலும், துன்பம், துக்கம், ஆபத்து என மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட மனதை திடமாக வைத்துக்கொண்டு கலங்காமல் இருப்பதும் ஒரு வகையான தைரியம். இவ்வாறு தைரியம் ஆனது வெற்றி பெறுவதற்கான துணிச்சலையும் குறிக்கிறது. அதேபோல், கடிமான சூழ்நிலையை எதிர்கொள்வதையும் குறிக்கிறது.

ஏமாற்றுதல் என்பதன் வேறு சொல் என்ன.?

எனவே, தைரியம் என்றால் எந்தவொரு பயமுமின்றி ஒரு செயலை செய்யும் மனவலிமையை/திறனை குறிக்கிறது. எதையும் சரியாக செய்து முடிக்க தைரியம் மிகவும் முக்கியம். கூச்ச சுபாவமுல்ல ஒரு மனிதனை, அவனிடம் இருக்கும் பய உணர்வை போக்கி எதையும் துணிந்து செய்யும் மனவலிமை மிக்கவனாக மாற்றும் குணமே தைரியம் ஆகும்.

“எவ்வளவு தைரியம் இருந்திருந்தா இத நீ பண்ணிருப்ப” இந்த வார்த்தையை பலரும் சொல்லி கேட்டு இருப்போம். ஒரு மனிதனுக்கு தைரியம் என்ற உணர்வு மட்டும் இருந்தால் எந்தவொரு செயலை செய்வதற்கும் துணிவான் என்பதே இந்த வார்த்தைக்கான அர்த்தம்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதிருப்பது பேதைமையாகும். அறிவுடையார் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சவே செய்வர்.

தைரியம் வேறு பெயர்கள்:

  • துணிச்சல்
  • வீரம்
  • துணிவு
  • சாகசம்
  • தீரம்
  • துணிகரம்
  • மதர்ப்பு
  • மனதிடம்
  • மனோதிடம்
  • மனோபலம்
  • மிடுக்கு
  • முறுக்கு
  • உறுதி
  • திடம்
  • மனத்துணிவு 
  • குதிரையின் பெருமித நடை 

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் தைரியம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும்,  தைரியம் என்பதை துணிச்சல் என்று தான் கூறுவார்கள்.

தைரியம் in English Word:

தைரியம் என்ற தமிழ் சொல்லுக்கு Courage அல்லது Bravery என்பது ஆங்கில சொல்லாக இருக்கிறது.

நினைவு என்பதன் வேறு சொல் என்ன.?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement