தாமரையின் வேறு பெயர்கள் | Thamarai veru Peyargal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தாமரையின் வேறு பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். தாமரை மலர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். தாமரை பூ பல வண்ணங்களில் குளம், குட்டை, ஏறி போன்ற நீர் நிலைகளில் பூக்கக்கூடியது. தாமரை எப்போது நீர் நிறைந்த இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். வெண் தாமரை ஆயுர்வேதத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தாமரை ஒரு மூலிகை தாவரம் ஆகும். தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. தாமரையின் அணைத்து பாகங்களும் பயன்படுத்தக்கூடியது. தாமரை விதையின் பருப்பை, சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகங்கள் வலுவாக இருக்கும். வெண்தாமரையில் சர்பத் செய்து சாப்பிட்டு வந்தால், இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் போன்ற நோய்கள் சரியாகிவிடும். இப்படி ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கும் தாமரைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் இப்பதிவை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள.
தாமரை பற்றிய சில தகவல்:
- தாமரை நீரில் பல்லாண்டு காலம் வாழக்கூடியது.
- இந்துக்களின் வழிபாட்டில் தாமரை முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும்.
- இந்து கடவுளான லக்ஷ்மி தேவி சிவப்பு தாமரையிலும் சரஸ்வதி வெள்ளை தாமரையிலும் இருக்கிறார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.
- திருமாலுக்கு மிகவும் பிடித்த மலர் தாமரை ஆகும்.
- மன்மதன் எய்திய அம்புகளில் தாமரை மலரும் ஒன்று.
- தாமரை மலர் புனிதமானதும், தெய்வீக தன்மை கொண்டதும் ஆகும்.
- சூரியன் உதிக்கும்போது மலர்ந்து சூரியன் மறையும் நேரத்தில் மூடிக்கொள்ளும்.
தாமரை வேறு பெயர்கள்:
- கமலம்
- பங்கஜம்
- அம்புஜம்
- சாரோருசம்
- வனசம்
- கஞ்சம்
- வாரிஜம்
- ஈரஜம்
- பத்மம்
- அரவிந்தம்
- போகனந்தம்
- முண்டகம்
- புண்டரிகம்
- ஜலஜா
- பதுமம்
- இண்டை
- சதபத்ரி
- நளினம்
- சரோஜம்
- முளரி
- மலர்
- வாரிஜம்
- ஜலஜம்
- அம்போருகம்
- புண்டரீகம்
- அரும்பு
- செங்கமலம்
- சரோஜா
- நளினி
- பத்மா
- கமலா
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும், தாமரையின் வேறு பெயர்கள் ஆகும். ஆனால், நம்மில் பலருக்கும் தாமரைக்கு இவ்வளவு பெயர்கள் இருக்கிறது என்பதே தெரியாது. அதிலும், பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர்களான செங்கமலம், சரோஜா, நளினி, பத்மா மற்றும் கமலா போன்ற பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
வீட்டில் விதையில் இருந்து தாமரை செடி வளர்க்கலாம் வாங்க
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |