தீமை வேறு சொல் | Theemai Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீமை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதே அர்தத்தினை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சொல்லை கூறுவார்கள். அதாவது, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக கூறுவார்கள். எடுத்துக்காட்டாக தீனி என்பதை பண்டம் என்று கூறுவார்கள். இதுபோன்று பல சொற்களை பலவிதமாக கூறுவார்கள்.
ஆனால், நம்மில் பலருக்கும் தமிழ் மொழியில் உள்ள சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு தமிழ் சொற்களுக்காக வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஆகையால், நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் பொதுநலம் வலைத்தளத்தை பார்வையிடவும். இன்றைய பதிவில் தீமை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தீமை என்ற சொல்லின் வேறு சொல்:
- கெடுதல்
- கெடு
- கேடு
- தீங்கு
- துன்பம்
- கொடுமை
- குற்றம்
- பாவச்செயல்
- குறும்பு
- மோசம்
- கொடியது
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் தீமை என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.
தீமை என்றால் என்ன.?
தீமை என்றால் ஒரு தமிழ் சொல் ஆகும். கெட்ட செயல், கொடுமை, பாவச்செயல் அனைத்தும் தீமையில் அடங்கும். இது ஒரு மனிதரின் தீமையை குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒரு பொருள், ஒரு உயிரினம், உணவுப்பொருள் இப்படி அனைத்திலும் தீமை என்பது இருக்கிறது. நன்மை இருந்தால் மறுபுறம் தீமையும் இருக்கத்தான் செய்கிறது.
இது ஒவ்வொரு இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தீமை என்பது மாறுபாடும். எதெல்லாம் நமக்கு துன்பத்தை அளிக்கிறதோ அவற்றையெல்லாம் நாம் தீமை என கருத்தில் கொள்ளலாம்.
தீமை எடுத்துக்காட்டு வாக்கியம்:
- அவன் செய்த செயலால் ஊருக்கே தீமை உண்டாயிற்று.
- மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.
- தீமை ஒருபோதும் மற்றவர்களுக்கு கஷ்டத்தை மட்டுமே அளிக்கும்.
- தீமை என்ற சொல்லின் எதிர்மறை நன்மை என்பதாகும்.
தீமை திருக்குறள்:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பொருள்:
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
தீமை in Engilsh:
தீமை என்பதை ஆங்கிலத்தில் Evil என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |