Thirudan Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதாவது நாம் பேசும் தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அபப்டி இருக்கும் வார்த்தைகளை நாம் தினமும் அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக திருடன் என்ற வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். ஆகவே நம்மில் பலரும் திருடன் என்ற வார்த்தைக்கான வேறு சொல் என்ன என்பதை தேடி இருப்பீர்கள். எனவே அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
திருடன் என்றால் என்ன..?
பொதுவாக திருடன் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் அனைவருமே திருடன் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் திருடனையும் பார்த்திருப்போம்.
மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அந்த பொருளை உரிமையாளர்களுக்கு தெரியாமல் எடுப்பதற்கு பெயர் தான் திருட்டு. இப்படி மற்றவர்களின் பொருட்களை அவர்களுக்கு தெரியாமல் திருடுபவன் தான் திருடன்.
அதுபோல திரு என்றால் செல்வம். அப்படி செல்வத்தை களவாடுபவனை தான் நாம் திருடன் என்று சொல்கின்றோம்.
அதேபோல இந்த திருடன் என்ற வார்த்தையை பல விதங்களில் கூறலாம். அதாவது திருடன் என்ற சொல்லானது, ரிக் வேதத்தில் ‘தஸ்யூ’ (Dasyu) என்ற சொல் பல இடங்களில் பேசப்படுகிறது.
இந்த தஸ்யூ என்ற சொல்லுக்கான பொருள் குற்றம் இழைத்தவன் என்பதாகும். மேலும் இந்த திருடன் என்ற வார்த்தைக்கு பல வேறு பெயர்கள் இருக்கின்றன. அதை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே படிக்கவும்.
திருடன் வேறு சொல்:
- களவாடுபவன்
- கள்வன்
- திருடன்
- கள்ளன்
- கரியவன்
- நடுச்செல்வோன்
- கொள்ளையன்
- குற்றம் இழைத்தவன்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |